சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெரு, எண்.109/2A என்ற முகவரியில் மூதாட்டி இளஞ்சியம், பெண்/ வ-66, க/பெ. பாலகுருசாமி என்பவர் வசித்து வருகிறார். மூதாட்டி இளஞ்சியம் காலை 10.30 மணியளவில் வீட்டிலிருந்த போது, அங்கு, மூதாட்டிக்கு ஏற்கனவே அறிமுகமான ஆறுமுகம் என்பவர் மேற்படி மூதாட்டி வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.
சிறிது நேரத்தில் ஆறுமுகம் மேற்படி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து மூதாட்டி இளஞ்சியம் H-3 தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
H-3 தண்டையார்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறுமுகம், வ/40, த/பெ.சுந்தரமகாலிங்கம், எண்.2/16, வெங்கடேஷ் 3வது தெரு, பனைமரத்தொட்டி, இராயபுரம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 சவரன் தங்கச் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் ஆறுமுகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்படி மூதாட்டியிடம் கடனாக ரூ.5,000/-பணம் கேட்டுள்ளார். மூதாட்டி பணம் தன்னிடம் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் மேற்படி மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஆறுமுகம் மீது ஏற்கனவே வழிப்பறி மற்றும் திருட்டு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ஆறுமுகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.