H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் காலை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலுள்ள ஒரு கல்லூரி அருகே கண்காணித்த போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். மேலும், காவல் குழுவினரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி தப்பிக்க முயன்றார். அதன் பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.
அதன் பேரில், H-3 தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக குட்கா, கடத்தி வந்த குணசேகரன், வ/30, த/பெ.மணி, சோலையப்பன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 45.4 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், ரெமோ, விமல் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பணம் மற்றும் பணம் ரூ.350/-பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரி குணசேகரன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.