மதுரை: வாடிபட்டியருகே உள்ள டி. ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நூறு கிராமதிலுள்ள மக்கள் நூறு விழுக்காடு காப்பீடு வசதி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட டி.ஆண்டிப்பட்டி ஊராட்சி, டி ஆண்டிப்பட்டி, சின்னமயாநயக்கன்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் நூறு விழுக்காடு ஒன்றிய அரசின் காப்பீடு திட்டம் மற்றும் ஓய்வுதிய திட்டதின் கீழ் பயனடையும் வகையில், இங்குள்ள யூனியன் பேங் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு தொடங்கி அதன் மூலம் கிராம மக்கள் அனைவரும் காப்பீடு திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.காப்பீடு திட்டத்தில் இணையும் தகுதி உள்ள அனைவரும் காப்பீடு திட்டத்தில் இணைந்ததை அறிவிக்கும் நிகழ்ச்சி டி.ஆண்டிப்பட்டி ஊராட்சியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கலந்து கொண்டு ஊராட்சியின் நூறு விழுக்காடு மக்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைந்ததை அறிவித்தார்.தொடர்ந்து பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழையும், வங்கி கணக்கு புத்தகத்தையும் வழங்கினார்.