ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் பிரமிக்கவைக்கும்  புதிய Jawa 42 Bobber மூலம் தொழிற்சாலை வழமை பிரிவில் ஆதிக்கத்தை வலுப்படுத்துகிறது.

ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் மூன்று புதிய ஜாவா மாடல்களுடன் அதன் மறுபிரவேசத்தை அறிவித்த அந்த ஆண்டு 2018!, பெராக்,  அதன் கருமையான, புதிரான தோற்றம் மற்றும்  இதுவரை பார்த்திராத ஸ்டைலிங் உடன் அதிகபட்ச பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வருடம் கழித்து முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜாவா பெராக், நாட்டில் ‘தொழிற்சாலை வழமை’ பிரிவில் முன்னோடியாக இருந்தது. இது, அதன் சொந்த ஒய்யாரத்தை  புதுப்பித்து , தொழிற்சாலையில் கட்டப்பட்ட ஒன்றின் உறுதியுடன் வந்த ஜாவாவை அடிப்படையாகக் கொண்ட வழமையான மோட்டார் சைக்கிளை சொந்தமாக வைத்திருப்பதற்கான விருப்பத்தை மக்களுக்கு அளிப்பதன் மூலம் சடுதியாக ஒரு சாலை பிரபலமானதாக மாறியது.

இன்றைக்கு வேகமாக முன்னோக்கி, மேலும் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் நிலைப்பாட்டில் மற்றுமொரு  ‘தொழிற்சாலை வழமை ’ இணையும் நேரம் வந்துவிட்டது. இம்முறை Jawa 42 ஆனது, புதிய Jawa 42 Bobber ஆக தொழிற்சாலை வழமை  செயல்முறையை  பெறுகிறது. இந்தியாவில் உள்ள பாபர் மற்றும் தொழிற்சாலை வழமை  கலாச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், புதிய மோட்டார்சைக்கிள் மிஸ்டிக் காப்பர், மூன்ஸ்டோன் ஒயிட் மற்றும் டூயல் டோன் ஜாஸ்பர் ரெட் ஆகிய மூன்று பளபளப்பான வண்ணங்களில் கிடைக்கும். டிசைன் & ஸ்டைலிங் செயலாக்கம் மட்டுமல்ல, புதிய 42 பாபர், ‘தொழிற்சாலை வழமை ‘ அனுபவத்தை உயர்த்த பணிச்சூழலியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளையும் கொண்டுள்ளது. இந்த புதிய

மோட்டார் சைக்கிள்   ரூபாய் 2,06,500 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)  முதல் விலையிடப்படும், அடுத்த வார தொடக்கத்தில் இருந்து ஜாவா யெஸ்டி டீலர்ஷிப்கள் முழுவதும் சோதனை சவாரிகள் மற்றும் டெலிவரிகளுக்கு கிடைக்கும்.

புதிய மோட்டார் சைக்கிள் ஐ வெளிப்படுத்தும்பொழுது , கிளாசிக் லெஜெண்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சிங் ஜோஷி கூறுகையில், “புதிய 42 பாபர் எங்களுக்கான உயர் சாதனைகளின் ஒருங்கிணைப்பாகும். இந்த ஜாவா 42,   எங்களின்  ஒரு நவீன பழைய பாணி  மோட்டார்சைக்கிளின்  விசித்திரமாக  இருந்தது. ஜாவா 42 என்பது ஒரு நவீன ரெட்ரோ மோட்டார்சைக்கிளைப் பற்றிய எங்கள் வினோதமான அம்சமாகும், இது இளைஞர்களிடையே நன்றாக வெற்றியடைந்து,  எங்களின் அதிக விற்பனையான மாடல்களில் ஒன்றாக மாறியது. பெராக் மூலம், நாங்கள் நாட்டில் ஒரு புதிய ‘தொழிற்சாலை வழமை’ பிரிவை உருவாக்கினோம், அதன் பிரபலமும் ரசிகர் பின்தொடர்தலும்  ஒருவருக்கும் மறைக்கப்படவில்லை. இந்த புதிய 42 Bobber ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு நன்மைகளை  ஒருங்கிணைத்து 42 இன் இளமை மற்றும் துடிப்புடன் செயல்திறன் மற்றும் பாபரின் தனித்துத்தை  கலக்கிறது. இதன் மூலம், தனித்துவமான, ஸ்டைலான மற்றும் நம்பிக்கையான  ஒரு வழமையான மோட்டார்சைக்கிளைத் தேடும் பரந்த அளவிலான ரைடர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்று கூறினார்.

பெராக்  இருளை ஆளப் பிறந்தாலும், இந்த புதிய 42 பாபர் முழுக்க முழுக்க ஸ்டைலான நேர்த்தியுடன் இருக்கிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் பாபர்,   குறைந்தபட்ச வெளிப்புற பகுதி, செதுக்கப்பட்ட சட்டகம், தாழ்ந்த  ஒற்றை இருக்கை மற்றும் பெருத்த டயர்கள் போன்ற அத்தியாவசியங்களுக்கு மட்டுமே பொருந்துகிறது மாத்திரமல்ல, ஆனால் ஒரு ஒய்யாரமான வண்ணம் மற்றும் கவனத்தை ஈர்க்கும் ஸ்டைலுடன்  அது முதலிடம் வகிக்கிறது.

 ஜாவா 42 பாபர் ஒரு முற்றிலும் புதிய  ஸ்டைலிங் தொகுப்பைப் பெறுகிறது, அது கவர்ந்திழுப்பது  மட்டுமின்றி செயல்திறமிக்கது  மற்றும் பாபர்களுக்குப் பிரபலமான உச்சநிலையை பின்பற்றுகிறது. முன்பக்கத்தில் இருந்து தொடங்கி, இது ஒரு புதிய வட்டமான ஹெட்லேம்ப் மற்றும் தனித்த  கடிகார கன்சோல், புதிய ஹேண்டில்பார், புதிய பியூயல் டேங்க் மற்றும் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இருக்கை ஆகியவற்றைப் பெறுகிறது.

புதிய பியூயல் டேங்கில்  பணிச்சூழலியல் ரீதியாக செதுக்கப்பட்ட முழங்கால் இடைவெளிகள் டேங்க் பேட்களுடன் நவீன-சமீப தொடுதலை சேர்ப்பது மட்டுமல்லாமல், சவாரி செய்யும் போது பிடிப்பையும்  வழங்குகிறது. சட்டகங்கள்  மற்றும் பக்க பேனல்கள் புதிய வண்ணங்களை இன்னும் தனித்து நிற்கச் செய்ய பளபளப்பான கருப்பு நிறத்தில் பூசப்படுகிறது. 

பிரத்யேக  கடிகார கன்சோல் மற்றும் நேர்த்தியாக கட்டுவிக்கப்பட்ட  ஹெட்லேம்ப் யூனிட் ஆகியவை இந்த  42 ஆல் ஈர்க்கப்பட்டுள்ளன, ஆனால் முன்பக்கத்தை வலிமையாக  தோற்றமளிக்க மெருகூட்டப்பட்டது. மாறுபட்ட எல்சிடி திரையுடன் கூடிய டிஜிட்டல் கடிகார கன்சோல் அனைத்து முக்கிய தகவல்களையும் இருக்கையிலிருந்து சிறந்த தெரிவுநிலையையும் வழங்குகிறது. எல்லா விளக்குகளும் எல்இடி ஆகும் மற்றும் இந்த மோட்டார் சைக்கிள் இந்த செயல்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சுவிட்ச் கியர் ஐ பெறுகிறது.

மிதக்கும் இருக்கை, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இருக்கை ஆதாரம், குஷனிங் மற்றும் அப்ஹோல்ஸ்டரியுடன் முற்றிலும் ஒரு  புதிய அலகு ஆகும். இந்த புதிய இருக்கை 42 பாபரின் மேம்படுத்தப்பட்ட பணிச்சூழலுக்கான அடிப்படையாகவும் அமைகிறது. ரைடர் விருப்பங்களுக்கு ஏற்றவாறு ஈர்க்கக்கூடிய, வசதியான மற்றும் பல்துறை கொண்ட இருக்கை அமைப்பைக் கொண்டு வருவதற்கு நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிய ஹேண்டில்பார், புதிய ஃபார்வர்ட் ஃபுட் கண்ட்ரோல்கள் (ஃபுட் பெக்ஸ் & லீவர்ஸ்) மற்றும் இருக்கை ஆகியவை புதிய ரைடரின் முக்கோணத்தை வழங்குகின்றன.  பன்முகத்தன்மை, இருக்கையில் 2-படி மாற்றியமைப்பு அம்சத்திலிருந்து வருகிறது, இது ரைடரின் விருப்பப்படி முன்னும் பின்னும்  நகர்த்தலாம். இதன் விளைவாக மிகவும் வசதியான சவாரி தோரணை உள்ளது, இது பாபர் எதற்காகக் குறிக்கப்படுகிறதோ அதற்கு சரியாக சில உற்சாகமான சவாரிக்கான மனநிலையையும் உங்களுக்கு ஏற்படுத்துகிறது ! 

உற்சாகமான சவாரி பற்றி பேசும்பொழுது , 42 பாபர், பெராக் இன்  பாரம்பரியத்தை அதன் 334சிசி எஞ்சினுடன் முன்னோக்கி கொண்டு செல்கிறது, இது 30.64பிஎஸ் சக்தியையும் 32.74Nm  முறுக்குவிசையையும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கிறது. இதன் விளைவாக ரெவ் வரம்பு முழுவதும் அதிகாரப்பூர்வ செயல்திறன் உள்ளது. நகரத்தில் சவாரி செய்தாலும் சரி அல்லது திறந்த நெடுஞ்சாலைகள் வழியாக கர்ஜித்தாலும்  சரி, 42 பாபர், அதன் ரைடர்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதற்கு டியூன் செய்யப்பட்டுள்ளது. போட்டித்திறன் வாய்ந்த சேஸிஸ் இப்போது ரீட்யூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் ரீகலிபிரேட்டட் பிரேக்குகள் மூலம் ஒரு கூர்மையான உணர்வுக்காக இன்னும் சிறப்பாக இருக்கிறது. பிரேக்குகளைப் பற்றி பேசுகையில், 42 பாபர், வகையில் சிறந்த  கான்டினென்டல் டூயல் சேனல் ஏபிஎஸ் தரத்துடன் வருகிறது.

இதன் விளைவாக, 42 பாபரின் உணர்வின் சரியான உருவகமான ‘Meander’ பிராண்ட் பிரச்சாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் மோட்டார் சைக்கிள் ஆக இருக்கிறது. ஒரு நிலையான திட்டம் இல்லாமல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் புவியியல் அர்த்தத்தை Meander  கொண்டிருந்தாலும், அது மனதின் சூழலிலும் பயன்படுத்தப்படுகிறது, அங்கு நீங்கள் சவாரி செய்யும்போது மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொன்றுக்கு தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கும். விருப்பத்தின் பேரில் சவாரி செய்வது, கனவில் சவாரி செய்வது அல்லது கர்மத்திற்காக சவாரி செய்வது – 42 பாபர் என்பது நீங்கள் விரும்பியபடி சவாரி செய்வதற்காக உருவாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »