சொந்த வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க தலித் விடுதலை மற்றும் தோழமை அமைப்புகள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  பட்டம் கள்ளிமந்தயம் கிராமம் சர்வே எண் 529/6-ல்  சுமார்    3 ஏக்கர் அரசு தீர்வை ஏற்படாத தரிசு நிலம் கடந்த ஓராண்டுக்கு முன்பாக பழனி வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் ஆதிதிராவிட நத்தமாக வகை மாற்றம் செய்யப்பட்டு கள்ளிமந்தயம் பகுதியில் சொந்த வீடு இல்லாத பட்டியலின மக்களுக்காக பட்டா வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்படும், பட்டா வழங்காமல் காலம் கடத்தும் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர்  மு.முத்துச்சாமி அவர்களை செப்டம்பர் 1-ந்தேதி சந்தித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர்  ச.கருப்பையா, மாநில பொதுச்செயலாளர் சசிகுமார், மாநில துணைத்தலைவர் கள்ளிமந்தயம் கே.ராமர், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர்  ப.செல்வகுமார், மற்றும் பல்வேறு தோழமை அமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இறுதியாக வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டுமெனவும், மீண்டும் அரசு காலதாமத படுத்தினால் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »