சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 55 வது வட்ட திமுக சார்பாக ஐராவதநல்லூர் அருகே இலவச மருத்துவ முகாம்..

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் அருகே பாபு நகரில் சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 55வது வட்ட திமுக மற்றும் வேலம்மாள் மருத்துவமனை சமூக நலம் & குழந்தைகள் நலம் சார்பாக குழந்தைகள், முதியோர்கள் உட்பட ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் ஐராவதநல்லூர், பாபுநகர் உட்பட சுற்றுப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்து பயன்பெற்றனர். இம்முகாமில் அவனியாபுரம் கிழக்கு பகுதி செயலாளர் செந்தாமரை கண்ணன், வடக்கு மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட வழக்கறிரணி துணை அமைப்பாளர் கனகவேல் பாண்டியன், 55 வது வட்ட கழக செயலாளர் கரு.ஆறுமுகம், சாய்குமார், சின்னராஜா, பிரவீன்குமார் உட்பட வட்ட பிரதிநிதிகள், வேலம்மாள் மருத்துவமனை சமூக நலம்& குழந்தைகள் நலம் மருத்துவர்கள் ஸ்ரீஆண்டாள், அஷார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »