திருவண்ணாமலை – சேத்துப்பட்டு வட்டம் செவரப்பூண்டி மதுரா ரேணுகாம்பாள்புறம் பகுதியை ராஜமாபுரம் ஊராட்சியில் இணைக்க வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வா.சீனிவாசன். மாவட்டச் செயலாளர் ஏகாம்பரம். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் அவர்களது மனுவில் கூறியதாவது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் செவரப்பூண்டி மதுரா ரேணுகாம்பாள்புரம் பகுதியில் வசிக்கும் நாங்கள் சுமார் 25 விவசாய குடும்பங்கள் ராஜமாபுரம் கிராம ஊராட்சியில் தான் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கும் கால்நடைகளும் போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும் உரிமையான விவசாய நிலங்களுக்கு அருகாமையில் சென்று குடியேறி விட்டோம். ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் மேற்படி விவசாய குடும்பங்கள் வசிக்கும் பகுதியான ரேணுகாம்பாள்புரம், செவரப்பூண்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி என்று செவரப்பூண்டி கிராம ஊராட்சியில் மேற்கண்ட பகுதியை இணைத்து விட்டனர்.
இதனால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய விவசாய குடும்பங்கள் ஆகிய நாங்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளோம் மற்றும் ராஜமாபுரம் கிராம ஊராட்சியில் கோவில் வழிப்பாடு மட்டும் ஊர் திருவிழாக்களில் பங்கெடுத்துக் கொள்வது மற்றும் குழந்தைகளை அங்கன்வாடி பள்ளி முதல் தொடக்கப் பள்ளி வரை ராஜமாபுரம் ஊராட்சியில் தான் பயின்று வருகின்றனர். மற்றும் வாழ்வாதாரமான விவசாயம் செய்வதற்கு ராஜமாபுரம் கிராம ஏரி. குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்து தான் விவசாயம் செய்து வருகின்றோம். மற்றும் சுப நிகழ்ச்சி மற்றும் யாராவது இறந்து விட்டால் அவர்களை அடக்கம் செய்வதும் ஈமச் சடங்குகளை செய்வதும் ராஜமாபுரம் ஊராட்சியில் தான் நடந்து கொண்டு வருகின்ற நிலை உள்ளது.
மேலும் அப்பகுதியில் விவசாய குடும்பங்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கும் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் பூர்வீக கிராமமான ராஜமாபுரம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் தான் இன்று வரை அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருகின்றோம். இந்நிலையில் உள்ள போது ரேணுகாம்பாள்புரம் பகுதியில் வசிக்கக்கூடிய விவசாய குடும்பங்கள் செவரப்பூண்டி ஊராட்சி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதனால் ராஜமாபுரம் கிராமம் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றோம். இதனால் ரேணுகாம்பாள்புரத்தில் வசிக்கக்கூடிய முதியவர்கள். பெண்கள். மாற்றுத் திறனாளிகள். குழந்தைகள். ஆகியோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே விவசாய குடும்பங்கள் செவரப்பூண்டி கிராமத்தில் இருந்து விடுவித்து பூர்விக கிராமமான ராஜமாபுரம் கிராமத்தில் இணைத்து மேற்படி விவசாய குடும்பங்களுக்கு ராஜமாபுரம் கிராம ஊராட்சிகள் வீட்டுவரி. மகாத்மா காந்தி. தேசிய ஊரக வேலைவாய்ப்பு. ஆகிய திட்ட பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்து தர வேண்டும். அரசு நலத் திட்டங்களை வழங்க வேண்டும் எனவும் மேற்படி விவசாய குடும்பத்தில் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்