சென்னை பெருநகர காவல்துறையில் சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண்காவல் ஆய்வாளர்கள் அனைவரும் காவல் பணியிலும் வாழ்க்கையிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெற சமநிலை வாழ்வுமுறை (Work Life Balance) என்ற 3 நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) சிறப்பு பயிற்சி முகாமினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், 24.09.2021 அன்று, புதுப்பேட்டை, ஆயுதப்படை துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்தார்.
இப்பயிற்சியில், பெண்காவல் ஆளிநர்கள் முதல் பெண் காவல் ஆய்வாளர்கள் அனைவரும் காவல் பணியிலும், சொந்த வாழ்விலும் திறம்பட செயல்பட்டு, இரண்டிலும் சமஅளவில் வெற்றி பெறுவதற்காக Self Image, Self Motivation and Happiness, Health, Positive Emotions and Calmness, Managing Relationship with Ease, Facing Work Challenges,Empowerment, Work life balance, Time Management, Yoga, Pennalam ஆகியவை குறித்து வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்புடன் கண் (Eye), காது, மூக்கு, தொண்டை (ENT), இரத்த அழுத்தம் (BP), நீரழிவு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Uterus Cancer) மற்றும் மார்பக புற்று நோய் (Breast Cancer) உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மேற்படி சமநிலை வாழ்வு முறை பயிற்சியை, “ஆனந்தம்” என பெயர் மாற்றம் செய்து, பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு தொடர்ந்து இப்பயிற்சி அளிக்க 20.06.2022 அன்று உத்தரவிட்டதின் பேரில், ஆனந்தம் என்ற பெயரில் பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த 04.12.2022 வரையில் 48 பயிற்சி வகுப்புகள் (48 Batches) அளிக்கப்பட்டது. இதில் 2,216 பெண் காவலர்கள் முதல் பெண் ஆய்வாளர்கள் வரையிலான பெண் காவல் அலுவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அதன் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், மாலை, வேப்பேரி, அனிதாமெதடிஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளிவளாகம், BKN Multi Purpose Hall லில் “ஆனந்தம்” பயிற்சி வகுப்பின் முதலாம் ஆண்டு விழா மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்த 2,715 பெண் காவலர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆனந்தம் பயிற்சியின் 2ம் கட்ட பயிற்சி முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
பெண்காவல் ஆளிநர்கள் மற்றும் பெண்காவல் அதிகாரிகள், காவல்துறை பணியையும், தங்களது குடும்பத்தையும் கவனித்து இரண்டிலும் சிறந்து விளங்கவும், சாதனைகள் புரியவும், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் மேற்படி பயிற்சி மிகவும் உதவியதாகவும், இதனால் கூடுதல் பலத்தையும், தன் நம்பிக்கையையும் பெற்றுள்ளோம் எனவும் ஆனந்தம் பயிற்சி பெற்ற பெண்காவல் ஆளிநர்கள் மற்றும் பெண்காவல் அதிகாரிகள் தெரிவித்ததாக காவல் ஆணையாளர் சிறப்புரையாற்றினார். ஆகவே, சட்டம், ஒழுங்குபோல, ஆயுதப்படை பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளும் ஆனந்தம் பயிற்சி பெற்று பயனடைய 2ம் கட்ட ஆனந்தம் பயிற்சி வகுப்புகள் தொடங்கியதாகவும் தெரிவித்தார். இந்த பயிற்சி வகுப்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட பயிற்சிகளுடன் சேர்த்து புதிதாக Music Therapy, Art Therapy, & Drama ஆகிய சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது. இதனால் பெண்காவல் ஆளிநர்கள் புத்துணர்ச்சியுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் J.லோகநாதன், இணை ஆணையாளர் (தலைமையிடம்) B.சாமுண்டீஸ்வரி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர், துணை ஆணையாளர்கள் S.ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), M.ராமமூர்த்தி (நிர்வாகம்). K.சௌந்தராஜன், (ஆயுதப்படை-1) காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.