சென்னை கார் பிரியர்கள், 2021-ல் பயன்படுத்திய காரை வாங்குவதையை மிகச் சிறந்த தேர்வாக கருதுகிறார்கள்: ஸ்பின்னியில் கார் வாங்கியவர்களில் 55% பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்கிறது Spinny இணையதளம்!

PINNYய-ன் சிறப்பு பார்வை 2021- சென்னை
தனிப்பட்ட கார் ப்ரியர்களின் ஓர் ஆண்டு – ஒரு ப்ரத்யேகமானப் பார்வை
முதல் முறையாக கார் வாங்குபவர்கள்55%
பெரும்பாலும் அதிகமாக கார் வாங்குபவர்களின் வயது30-40 ஆண்டுகள்
கார் வாங்கும் பெண்கள்27%
நேரடி வீட்டுக்கான டெலிவரி56%
ஆன் மூலம் வாங்குபவர்கள்33%
வரவேற்பைப் பெற்றிருக்கும் முதன்மையான 3 கார் பிராண்டுகள்மாருதி சுசூகி, ஹூண்டாய் மற்றும் ஃபோர்ட் [Maruti Suzuki, Hyundai & Ford]
அதிக வரவேற்புள்ள முதன்மையான 3 கார் ரகங்கள்மாருதி சுசூகி ஸிவிஃப்ட் [Maruti Suzuki Swift]ஹூண்டாய்  க்ராண்ட் ஐ10 [Hyundai Grand i10]ரெனால்ட் க்விட் [Renault Kwid]
முதன்மையான 3 வண்ணங்கள் சிவப்பு, க்ரே, வெள்ளை [Red, Grey, White]

கார் வாங்குபவர்களுக்கு ஏராளமான தேர்வுகள் குவிந்து கிடந்த போதிலும், இந்தியச் சந்தை விலை குறித்து அதிக உணர்வுள்ள ஒரு சந்தையாகவே இருந்து வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் சந்தை வளர்ச்சிக்கான அறிகுறிகளை கொண்டுள்ளதால், நகரத்தில் கார் வாங்குபவர்களின் தேவை அதிகரித்து வருவதாக, அதிலும் 55% பேர் முதன்முறையாக கார் வாங்குபவர்களாக உள்ளனர் என பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் இணையதளமான SPINNY கண்டறிந்துள்ளது. பயன்படுத்திய கார் எளிதாக மலிவு விலையில் கிடைப்பதால், அதை அவர்கள் வாங்கி ஒரு கார் உரிமையாளராக சொந்த காரில் தங்களது பயணத்தை தொடங்குகின்றனர்.

சென்னையில் கார் வாங்குபவர்கள் பிரீமியம் ஹேட்ச் பேக் கொண்ட, Renault Kwid, Maruti Suzuki Swift  & Grandi10 ரக கார்களை வாங்க விரும்புவதுடன், சிவப்பு, க்ரே மற்றும் வெள்ளை நிறங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இதில் பாலினம் தொடர்பாக மற்றொரு சுவாரசியமான டிரெண்டும் காணப்படுகிறது. அது என்னவென்றால் அவர்களில் 27 சதவீதம் பேர் பெண்கள்.

வாடிக்கையாளர்களில் ஹோம் டெஸ்ட் டிரைவ்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவதுடன், அவர்களில் பெரும்பாலும் 56% பேர் நேரடி ஹோம் டெலிவரியையே கார் வாங்கும் செயல்முறையில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், 33 சதவீதம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் கார் வாங்க முன்பதிவு செய்கின்றனர்.

SPINNY-ன் 2021 சிறப்பு பார்வைகள் குறித்து நீரஜ் சிங் (Niraj Singh of Spinny’s 2021) கூறுகையில், “பெருந்தொற்று காலகட்டத்திலும், அதற்கு பிறகும், SPINNY நிறுவனம் அதன் ஹேஷ்டேக் #WithExtraCare மூலமாக  ஹோம் டெலிவரி மற்றும் ஹோம் டெஸ்ட் டிரைவ்களில் கவனம் செலுத்தி வருகிறது.

ஒருவர் சொந்தமாக கார் வைத்திருப்பது என்பது இனி புதுமையான விஷயம் அல்ல, மாறாக  இந்தியாவில் பெருகி வரும் நகர்ப்புறங்கள் காரணமாக, அது ஒரு தேவையாக கருதும் போக்கு உருவாகியுள்ளது. தரம், தரப்படுத்துதல், மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை மையப்படுத்துதல், பயன்படுத்திய கார் நிறுவனத்தை நம்பி வரும் மக்கள் ஆகிய நான்கு தூண்களில் Spinny Assured ® நிறுவனம் கவனம் குவிப்பதுடன், கார் வாங்குபவர்களுடன் வாழ்நாள் முழுமைக்குமான உறவை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தரமான காரை விநியோகிக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் மேலும் எங்களின் விற்பனை எண்ணிக்கை இந்த திசையில் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது” என்றார்.

எங்கள் கொள்கைகள் மற்றும் உத்திகளுக்கு ஏற்ப, பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது Spinny #withExtraCare என்ற முன்னெடுப்பை அறிமுகப்படுத்தினோம். இந்த செயல்பாட்டின் வாயிலாக, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, கடுமையான கட்டுப்பாடு மற்றும் முழுமையான தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஹோம் டெஸ்ட் டிரைவ் வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினோம். இது வாடிக்கையாளர்கள் நடத்தையில் மாற்றத்தை உருவாக்கியதுடன், SPINNYயின் சேவைகளின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

அதன் இணையதளத்தில் இது குறித்து அனைத்து விபரங்களுடன் கூடிய, நிலையான விலை உத்தரவாதம் மற்றும் 5 நாள் பணம்  திரும்ப பெறும் உத்தரவாதம் மற்றும் 1 வருட SPINNY வாரண்டி போன்ற வெளிப்படையான கொள்கைகள் காரணமாக வீட்டிலிருந்தே எளிதாக முடிவு எடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »