சென்னையில் குடியிருப்புக்கான தேவை,  காலாண்டுக்கு காலாண்டு 13.0% அதிகரித்துள்ளது, அதே சமயம், வழங்கல், காலாண்டுக்கு காலாண்டு  5.1% அதிகரித்துள்ளது. Magicbricks PropIndex Report Q2, 2022 மேஜிக் பிரிக்ஸ்  ப்ரொப்இண்டெக்ஸ்   2022 இரண்டாம் காலாண்டு  அறிக்கை வெளிப்படுத்துகிறது…

சராசரி குடியிருப்பு விலைகள் காலாண்டுக்கு காலாண்டு 1.6%  அதிகரித்துள்ளது.

● 2 மற்றும் 3 BHK உள்ளமைவுகள் சந்தையில் பெரும்பான்மைப் பங்கை தொடர்ந்து கொண்டுள்ளன.

சென்னை,  ஜூலை ,2022: சென்னையில், குடியிருப்பு ரியல் எஸ்டேட்டுக்கான    தேவை (தேடல்கள்), காலாண்டுக்கு காலாண்டு,  13.0% அதிகரித்துள்ளது, வழங்கல் (பட்டியல்கள்) காலாண்டுக்கு காலாண்டு 5.1% அதிகரித்துள்ளது மற்றும் சராசரி சொத்து விலைகள் 1.6%  அதிகரித்துள்ளது என்று Magicbricks’ PropIndex Report Q2, 2022.  மேஜிக் பிரிக்ஸ்  இன் ப்ரொப்இண்டெக்ஸ் 2022 இரண்டாம் காலாண்டு  அறிக்கை வெளிப்படுத்தியது.

தேவை மற்றும் வழங்கல் இரண்டிலும், சதுர அடிக்கு ரூ. 5,000–10,000 பிரிவில் உள்ள வீடுகள் மலிவு பிரிவை விட அதிகம் விரும்பப்படுவது, சென்னையில் வீடு வாங்குபவர்கள், மலிவு விலை வீடுகளை விட நடுத்தர பிரிவு மற்றும் பிரீமியம் சொத்துக்களை விரும்புகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது .

சதுர அடி ரூ.5,000  க்கும்  கீழ் உள்ள மலிவு விலை குடியிருப்புப் பிரிவில் தேவையில் மொத்த பங்கு  33% மற்றும் வழங்களில் 34% உள்ளது. நகரத்தில் வீடு வாங்குபவர்களுக்கு, மலிவு விலை வீடுகளை விட நடுத்தர பிரிவு மற்றும் பிரீமியம்       சொத்துக்களுக்கு வலுவான விருப்பம் இருப்பதாக தெரிகிறது.

மேஜிக்பிரிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் பய் இந்த போக்கு குறித்து கருத்து தெரிவிக்கையில், “இந்தியா முழுவதும் குடியிருப்பு தேவை அதிகரிப்பு பொருளாதார மீட்பு மற்றும் வருமான ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கிறது. அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதால் பெருநகரங்களுக்குத் திரும்பும் குடும்பங்களால் இது தூண்டப்படுகிறது. வளர்ந்து வரும் பணவீக்கம், உலகளாவிய விநியோகச் சங்கிலியின் தாக்கம் மற்றும் பொருட்களின் உள்ளீட்டு விலை அதிகரிப்பு மற்றும் அடமான விகிதங்கள் விலைகளை உயர்த்துகின்றன, ஒட்டுமொத்தமாக வாங்குபவரின் நம்பிக்கையைப் பார்க்கிறோம், மேலும் இந்தியாவின் குடியிருப்பு சந்தை அடுத்த சில காலாண்டுகளிலும் தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று கூறினார்.

நகரத்தின் மற்ற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ள, பூந்தமல்லி (7.5%), ஆதம்பாக்கம் (7.5%), கோவிலம்பாக்கம் (7.5%), சாலிகிராமம் (7.5%), மற்றும் திருவான்மியூர் (4.8%) போன்ற மேற்குப் பகுதிகளின் சராசரி சொத்து விகிதங்கள் காலாண்டுக்கு காலாண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

மேலும், மக்கள் அடர்த்தியான மயிலாப்பூர் (7.5%), பல்லாவரம் (2.3%), கொரட்டூர் (1.5%), போரூர் (1.4%), படூர் (1.6%), மற்றும் கேளம்பாக்கம் (1.4%) போன்ற இடங்கள், அவர்களின் சராசரி சொத்து விகிதங்களில், காலாண்டுக்கு காலாண்டு சரிவை கண்டன.

மேஜிக்பிரிக்ஸ் பற்றி : இந்தியாவின் நம்பர் 1 சொத்து தளம்

சொத்து வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் வெளிப்படையான முறையில் இணைவதற்கான மிகப்பெரிய தளமாக, மேஜிக் பிரிக்ஸ், மாதாந்திர பரிவர்த்தனை  2 கோடிக்கும் அதிகமாகவும், 15 லட்சத்துக்கும் அதிகமான சொத்துப் பட்டியல்களின், செயலில் உள்ள தளமாகவும் உள்ளது. வீட்டுக் கடன்கள், வாடகை செலுத்துதல், மூவர்ஸ் மற்றும் பேக்கர்கள், சட்ட உதவி, சொத்து மதிப்பீடு மற்றும் நிபுணர் ஆலோசனை உள்ளிட்ட க்கும் மேற்பட்ட  சேவைகளுடன், அனைத்து ரியல் எஸ்டேட் தேவைகளுக்கான முழு-அடுக்கு  சேவை வழங்குநராக மேஜிக் பிரிக்ஸ்  உருமாறியது.

15 க்கும் அதிகமான வருட அனுபவம் மற்றும் ஆழ்ந்த ஆராய்ச்சி அடிப்படையிலான அறிவுடன், மேஜிக்பிரிக்ஸ், இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ரியல் எஸ்டேட் யு டியூப் சேனல் ஆன, MBTV மற்றும் பிற தனியுரிமக் கருவிகள் போன்ற நுண்ணறிவு-உந்துதல் தளங்களின் தொகுப்பையும் வழங்குகிறது, இதனால் வீடு வாங்குபவர்கள், விலை போக்குகள், முன்கூட்டிய கணிப்பு, வட்டார மதிப்புரைகள் மற்றும் தொடர்பான அனைத்து தகவல்களையும் அணுக முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »