சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/AnnaNagar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் சூளைமேடு, லோகநாதன் 2வது தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்து போது, அங்கு இரு சக்கர வாகனத்தின் அருகில் நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின் பேரில் அவரை சோதனை செய்த போது விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த யாசர் அராபத், வ/31, த/பெ.மொய்தீன், லோகநாதன் 2-வது தெரு, சூளைமேடு, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ 500 கிராம் கஞ்சா, 1 இரு சக்கர வாகனம், 1 செல்போன் மற்றும் 1 எடை இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட யாசர் அராபத் மீது ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் 1 கஞ்சா விற்பனை செய்த வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரி யாசர் அராபத் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.