சிவகங்கை – சிவகங்கை அருகே தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. முத்துப்பட்டியில் சங்கையா என்பவருக்கு சொந்த நிலத்தில் கிணறு தோண்டும் போது இச்சிலை கண்டெடுக்கப்பட்டது. தொல் நடை குழுவினர் நவகண்ட சிலையை ஆய்வு செய்தனர். இதில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் என்பது தெரியவந்ததையடுத்து, நிலத்தின் உரிமையாளர் அச்சிலையை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து சங்கையாவிற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.