சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 94- வது பிறந்த நாள் விழா…..

சாத்தூர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 94- வது பிறந்த நாள் விழா, சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ்.அய்யப்பன்  தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் எம்.சந்திரன்,
கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஆர்.கே.சுப்பையா, சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக் முன்னிலை வகித்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ படத்திற்கு  பிரபு நற்பணி மன்ற தலைவர் வேல்ச்சாமி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் எம்.ஜோதி நிவாஸ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நகர துணைத் தலைவர்கள் சேது ராமலிங்கம், ஜெயபாலன், சின்னப்பன், ஆறுமுகம், வெள்ளைச்சாமி ,நகரச் செயலாளர் ஆட்டோ ராஜ்குமார்,சத்திரப்பட்டி லட்சுமணன்,சாத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ்,சுதர்சன் டெய்லர்,டெய்லர் மாரியப்பன்,சங்கராபுரம் பரத் ராஜ், நகர பொதுச்செயலாளர் ரவி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சிவாஜி மன்றத்தினரும்  பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »