சங்கர்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் காலை அனகாபுத்தூர், காமராஜபுரம் சுடுகாடு அருகில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 நபர்களை பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது, நைட்ரோவிட் மற்றும் டைடல் ஆகிய உடல்வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் நைட்ரோவிட் மற்றும் டைடல் ஆகிய வலிநிவாரண மாத்திரைகள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளில் தருவதில்லை என்பதும், இந்தமாத்திரைகளை இவர்கள் போதைக்காக பயன்படுத்தியதும், மற்றவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
அதன்பேரில், உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக சட்ட விரோதமாக பயன்படுத்திய 1.அஜித்குமார் (எ) அஜித், வ/24, த/பெ.இருதயராஜ், வெள்ளைச்சாமிதெரு, பாத்திமாநகர், காமராஜபுரம், சென்னை, 2.வினித், வ/20, த/பெ.அந்தோணி, எண்.6, வெள்ளைச்சாமி தெரு, காமராஜபுரம், சென்னை, 3.கௌதம், வ/19, த/பெ.சிவகுமார், நவமணிதெரு, சென்டிரல் பேங்க் காலனி, குரோம்பேட்டை, 4.அரவிந்த்குமார், வ/20, த/பெ.கனி, நியூதெரு, பல்லாவரம், சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து10 மி.கி.அளவுகொண்ட90நைட்ரோவிட்மாத்திரைகள்மற்றும் 100 மி.கி.அளவுகொண்ட 20 டைடல்மாத்திரைகள்ஆகியவைபறிமுதல்செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்ட அரவிந்த்குமார் மீது ஒரு அடிதடி வழக்கு உள்ளது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 4 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.