- ஒரு குடும்ப அமைப்பில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கனவுகளை க்ரோமா எவ்வாறு பூர்த்தி செய்கிறது என்பதைக் காட்டும் தசரா டிஜிட்டல் திரைப்படத்துடன் தனது ;கனவுகளின் திருவிழா; [Festival of Dreams] பிரசாரத்தை கொண்டு வருகிறது
- க்ரோமா விற்பனையகங்களிலும் க்ரோமா.காம் தளத்திலும் 2022, அக்டோபர் 5 வரை தசரா இச்சலுகைகள் கிடைக்கும் ~
- குழந்தைகளுக்காக நம்பகமான கொலு உருவாக்குதல் பயிற்சியும் உண்டு
- பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த தயாரிப்புகளில் லாபகரமான அம்சங்கள் உண்டு
மங்களகரமான, மிகவும் எதிர்பார்ப்புக்குரிய பண்டிகையான தசராவை ஒட்டி, டாடா குழுமத்தைச் சேர்ந்த, இந்தியாவின் முதலாவது மற்றும் நம்பிக்கைக்குரிய பல்வேறு பிரிவுகளிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான மாபெரும் விற்பனை நிறுவனமான க்ரோமா (Croma) ஒரு டிஜிட்டல் திரைப்படம், குழந்தைகளுக்கான கொலு உருவாக்கும் பயிற்சி மற்றும் எதிர்பார்ப்புக்குரிய சலுகைகள் மற்றும் பிரத்தியேக தள்ளுபடிகளுடன் கூடிய பண்டிகைக்கால விற்பனையை உள்ளடக்கிய கனவுகளின் திருவிழா பற்றி அறிவித்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த பண்டிகைக்கால விற்பனையானது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தெலங்கானாவிலுள்ள க்ரோமா விற்பனையகங்களிலும் க்ரோமா இணையதளத்திலும் 2022 அக்டோபர் 5-ம் தேதி வரை தொடர்கிறது.
இந்த கொண்டாட்டத்துடன் மேலும் உற்சாகத்தையும் உணர்வுகளையும் சேர்க்கும் வகையில், காண்பவரின் மனதைத் தொடும் டிஜிட்டல் திரைப்படம் ஒன்றின் மூலமாக தனது கனவுகளின் திருவிழா பிரச்சாரத்திற்கு உயிர் தந்திருக்கிறது க்ரோமா. இதற்கு முன் நடந்த தசரா கொண்டாட்டங்களை புகைப்பட தொகுப்பில் பார்த்து புரட்டிக் கொண்டிருக்கும் ஒரு முதியவரைக் காட்டுகிறது இத்திரைப்படம்; ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒருவர் அல்லது சில குடும்ப உறுப்பினர்கள் இல்லாமலிருப்பதை அவர் உணர்கிறார். இந்த முறை குடும்பத்திலுள்ள அனைவரும் வீட்டுக்கு வருவது காட்டப்படுகிறது; அதன்பிறகும் யாரோ ஒருவரின் வருகைக்காக அந்த முதியவர் காத்திருக்கிறார். அப்போது அழைப்பு மணி ஒலிக்கிறது; வாசலில் வந்து நிற்கும் க்ரோமா பணியாளர் வாழ்த்துகளைச் சொல்லியவாறே தான் கொண்டு வந்த லேப்டாப், கேமிரா, பிரிண்டரை வைக்கத் தொடங்குகிறார். அவற்றை இணைக்கும் வேலை முடிந்ததும், அதில் இறுதியாகச் சில திருத்தங்களை மேற்கொள்கிறார் அந்த முதியவர். அதன்பின்னர், மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாட அனைவரும் சிரித்த முகத்துடன் ஒன்றாகத் திரண்டு நிற்கின்றனர். லேப்டாப்பில் இருந்து மெமரி கார்டை அம்முதியவர் எடுப்பதும், பிரிண்டரை பயன்படுத்தி புகைப்படங்களை பிரிண்ட் செய்வதும், அவற்றை ஒரு பிரேமில் இட்டு சுவரில் தொங்கவிடுவதும் அடுத்தடுத்து மாண்டேஜ் ஆக காட்டப்படுகிறது. ஒட்டுமொத்த குடும்பமும் அதனைப் பெருமையுடன் பார்க்கிறது.
ஒரு பொருளை வாங்கிய பின்னர் எந்தவிதமான கவலையில்லாத ஒரு நிம்மதியான அனுபவம் மற்றும் வாழ்நாள் சேவை உத்தரவாதம் ஆகியவற்றுக்கு க்ரோமா உறுதியளிக்கிறது. எனவே இந்த தருணத்தில் தங்களது தேவைகள், ஆசைகளுக்கேற்ற சரியான பொருளை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய உதவுவதிலும், அவர்களுக்கான பிரத்தியேக பலன்களை கொடுப்பதிலும் க்ரோமா அக்கறை கொண்டுள்ளது; இதனை அழகாக வெளிக்காட்டுகிறது இத்திரைப்படம்.
இந்த கொண்டாட்டத்திற்கு மேலும் உற்சாகம் சேர்க்கும் வகையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மற்றும் குழந்தைகளுக்கான கலைஞர்களைக் கொண்டு ஒரு கொலு உருவாக்கும் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது க்ரோமா. இந்த பயிற்சி 2022 அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளது. குடும்பங்கள் ஒன்றிணைந்து செல்ஃபி எடுக்க வசதியாக க்ரோமா விற்பனையகங்களில் மாபெரும் அளவில் கொலு அமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாக்கால கொண்டாட்டம் பற்றி க்ரோமா-இன்பினிட்டி ரிட்டெய்ல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் திரு.அவிஜித் மித்ரா (Mr. Avijit Mitra, MD & CEO, Croma-Infiniti Retail Ltd.) பேசுகையில், “இந்த விழாக் காலத்தில் க்ரோமாவில் உற்சாகம் பொங்குகிறது; சமீபத்திய சுதந்திர தினம் மற்றும் ஓணம் விற்பனையைப் போலவே நாடு முழுவதும் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். நாடு முழுவதுமுள்ள எங்களது விற்பனையகங்களில் சிறப்பான கேட்ஜெட்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயாராகவுள்ளனர். எங்களிடம் அபாரமான சலுகைகள் உற்சாகமூட்டும் கேட்ஜெட்கள் உள்ளன; இந்த விழாக் காலத்தில் எங்களது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்க எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.
’ஃபெஸ்டிவல் ஆஃப் ட்ரீம்ஸ்‘ பிரச்சாரத்தை குடும்ப ஒற்றுமையை அடிப்படையாக கொண்டு மனதைத் தொடும் வகையில் கருத்துருவாக்கம் செய்திருப்பதோடு அதை தயாரித்தும் இருக்கிறது So Cheers நிறுவனம். இந்த ஒரு நிமிட தொலைக்காட்சி விளம்பரம், தென்னிந்தியாவில் ஒளிப்பரப்பாக இருப்பதால் தென்னிந்திய சந்தையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விளம்பரம் பிராந்திய மொழி வாடிக்கையாளர்களுக்காக தெலுங்கில் இருந்து தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளுக்கும் ஏற்ற வகையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிகரமான மற்றும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும் இந்த வீடியோ, திருவிழாக்களின் போது ஒரு குடும்பத்தில் இருக்க வேண்டிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அதன் மீதான உணர்வையும் அழகுடன் சித்தரிக்கிறது. முதியவர் ஒருவர் கடந்த கால தசரா கொண்டாட்டங்களை நினைவுகூர்ந்து பார்க்கையில், தற்போது இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருடனும் சேர்ந்திருக்கும் ஒரு முழுமையான குடும்பப் படத்தைப் எடுக்கவேண்டும் என்று ஏங்குகிறார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கையில் அப்புகைப்படத்தை இந்தாண்டு எப்படியாவது எடுத்துவிட மேண்டுமென ஆவலுடன் காத்திருக்கிறார்.
உணர்வுகளையும், அன்பையும் வெளிப்படுத்தும் இந்த பிரச்சாரமானது க்ரோமாவின் தரமான தயாரிப்புகள் எல்லோரையும் சென்றடைய வேண்டுமென்பதையும், விசேஷமான தருணங்களில் தங்களது வாடிக்கையாளர்களின் இல்லங்களில் மகிழ்ச்சியை கொண்டு வரவேண்டுமென்ற தத்துவத்தையும் மிகுந்த அக்கறையுடன் ஒன்றிணைத்து செயல்படுத்தி வருகிறது
வேறு என்னவெல்லாம் இருக்கிறது? ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது க்ரோமா. ரூ.51,990 விலையில் தொடங்கும் ஆப்பிள் ஐபோன்13 குறிப்பிட்ட கால வரையறைக்குள் க்ரோமாவில் கிடைக்கும். ஆப்பிள் வாட்ச் எஸ்இ ரூ.19,990 விலையில் தொடங்குகிறது; இது போன்று ஸ்மார்ட்வாட்ச்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடியில் கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் பல முன்னணி நிறுவனங்களின் பல்வேறு புதிய மாடல்களை கவர்ச்சிகரமான சலுகைகளுடன் க்ரோமா வழங்குகிறது. இதில் தள்ளுபடிகளுடன் கூடிய மெகா சலுகைகள் உண்டு; ஒரு மாத காலத்திற்கு 55 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி விலை ரூ.29,990லும், வாஷிங் மெஷின்கள் விலை 6,990 ரூபாயிலும் இரு கதவுகள் கொண்ட ரெஃப்ரிஜிரேட்டர்கள் (side-by-side refrigerators) விலை .4,580 ரூபாயிலும் தொடங்குகின்றன. ஒன்ப்ளஸ் 10ஆர்எஸ்ஜி (Oneplus 10R5G) .32,999 ரூபாயிலும் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி (Samsung Galaxy M53 5G) .19,999 ரூபாயிலும் தொடங்குகின்றன. இந்த விழாக்காலத்தில் புதிதாக போன் வாங்க விரும்பும் ஒவ்வொருவரும் ரூ.13,999 விலையில் தொடங்கும் ஸ்மார்ட்போன்கள் உடன் ரூ.4,999 மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்வாட்ச்சை இலவசமாகப் பெறலாம். இண்டெல் கோர் ஐ3 11-வது ஜெனரேஷன் (Intel core i3 11th Gen) லேப்டாப்கள் ரூ.30,990 விலையில் இருந்து கிடைக்கும். அனைத்து பிரிவுகளிலும் உள்ள 2 மற்றும் 3 ஆண்டுகளுக்கான ஜிப்கேர் இடபிள்யூ (ZipCare EW) 10% தள்ளுபடி பெறும்.
ஹெச்எஸ்பிசி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஒன் கார்டு, யெஸ் வங்கி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளுக்கு 10% வரை உடனடி தள்ளுபடி உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளுக்கு விற்பனையகங்களில் வாடிக்கையாளர் நிதியில் இருந்து ரூ.10,000 வரை கேஷ்பேக் ஆக வழங்கப்படும்.
இந்த கனவுத் திருவிழாவில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து அறிய Croma.com இணையதளத்தைக் காணலாம் அல்லது அருகிலுள்ள க்ரோமா விற்பனையகம் சென்று அபாரமான தள்ளுபடியுடன் அற்புதமான விலையில் பொருட்களை வாங்கலாம்.
*அனைத்து சலுகைகளும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.