கோவை தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் கோவை மாவட்டம் சார்பில் தமிழ்நாடு ஹோட்டலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட நிர்வாகிகள் தலைவர் இ.செந்தில்வேல், மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட அமைப்பாளர் பெலிக்ஸ் தலைமையில் நடைபெற்றது.. மாநில தலைவர் சி.ஜெயச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன் வல்லரசு, மாநிலத் துணைச் செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார். நூற்றாண்டு கண்ட தேசியத் தலைவர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறைந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் நீதியரசர் ஏ.ஜே.முருகானந்தம், கோவை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் வின்சென்ட். மூத்த பத்திரிகையாளர்கள் கருணாகரன், பெரியாரின் தொண்டர் வசந்தம், ராமச்சந்திரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீதியரசர் கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் பல இருந்தாலும் தான் சார்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு எதை செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அதை அரசிடம் முறையாக எடுத்துச் சொல்லிபெற்று தருவதில் தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எத்தனை பத்திரிக்கையாளர்கள் இருந்தாலும் சமுதாயத்தை உயர்த்தும் ஒரே நோக்கத்தோடு நடுநிலையோடு பத்திரிகையாளர்கள் செயல்படவேண்டும். சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றால் அது நல்ல பத்திரிகையாளர்களால் மட்டுமே முடியும். அந்த வகையில் இச்சங்கம் அதன் சார்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு தேவைகளை முறையாக பெற்றுத் தருவதில் வல்லமையாக விளங்குகிறது. தவறு எங்கு நடந்தாலும் அதை முதலில் காவல் துறைக்கு முன்பு கண்டறிவதில் பத்திரிக்கையாளர்களுக்கு போட்டி நிலவுகிறது.
தவறுகளை சுட்டிக்காட்டி நடக்காவிடாமல் செய்திகளை வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிக்கை துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் கூறினான் “நான் அனைத்து பத்திரிக்கைகளையும் முறையாக தினசரி படிப்பதன் காரணமாகவே என்னால் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற முடிந்தது” என்று கூறியுள்ளார் காரணம் சமுதாயத்தில் என்னென்ன தேவை என்பதையும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன எனவேதான் நான் காலையில் எழுந்தவுடன் பேப்பர் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். நாட்டு நடப்புகளை தினசரி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிக்கை துறை முதன்மையாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் நாளை சிறந்த கல்வியாளர்களாக வரவேண்டும். உயர் பதவிகளை அடைய வேண்டும் என்று பேசினார் அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துறை உதவி ஆணையர் வின்சன்ட் சிறப்புரையாற்றினார் அதனைத் தொடர்ந்து பெரியாரின் தொண்டன் வசந்தம், ராமச்சந்திரன் அவர்களுக்கு முன்னாள் நீதியரசர் ஏ.ஜே. முருகானந்தம் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினர்.
விழாவில் ரமேஷ் பாரதி தலைமையில் கவியரங்கம் சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர் பட்டிமன்ற பேச்சாளர் ஜாதி பாண்டியன், டாக்டர் சத்தியசீலன், மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம் ராஜா முருகானந்தம் மாநில நிர்வாகி அமுதா குமாரி, பசுமை ராஜேந்திரன், கோவை மாவட்டகௌரவ தலைவர் செல்வராஜ், டாக்டர் முகமது இஸ்மாயில், விடுதலை ராஜா, செந்தில்குமார், சிவலிங்கம், ஜெகதீஷ் ஆரோக்கிய ராஜ் முகமது, சார் அசோக் ஞானசேகரன், கரூர் சுப்பிரமணி, ஈரோடு பவானி பாஸ்கர், தொழிற்சங்க மாநில நிர்வாகி ராம்மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பள்ளி பேக் வழங்கப்பட்டு சிறப்பு செய்தனர். முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அருள்ராஜ் நன்றி கூறினார்.