கோவை – மதுக்கரை கிழக்கு ஒன்றியம், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி செட்டிபாளையம் பேரூராட்சி தபால் நிலையம் முன்பு ஒன்றிய கழக பொறுப்பாளர் இரா.ராஜசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக பொறுப்பாளர் ரங்கசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் மாசிலாமணி, தேவராஜ், கருஞ்சட்டை சுரேந்தர் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.