கோவையில் மூன்று இடங்களில் புதிதாக மகளிர் காவல் நிலையம்.

கோவை

கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் ஸ்டேசன் சார்பாக போலீசாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இதில் 150 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  மாவட்ட போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினம் முகமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து அவர், நிருபர்களிடம் கூறும்போதுமாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
புறநகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க கடந்த 4 மாதங்களாக 32 இரு சக்கர வாகன ரோந்து பணியும், 12 நான்கு சக்கர ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதன் காரணமாக குற்றங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. அதிகப்படியான குற்றங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் 2,600 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகள், நிறுவனங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதால் குற்றங்களை விரைவாக கண்டுபிடிக்க முடிகிறது.
எனவே பொதுமக்களும் சாலையை நோக்கி கேமராக்களை வைக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் விரைவில் 3 இடங்களில் மகளிர் போலீஸ் ஸ்டேசன் ஏற்படுத்தப்பட உள்ளது. வட மாநிலத்தவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் உடனடியாக போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
மாநிலத்திலேயே முதல் முறையாக, கருமத்தம்பட் டியில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கிய வடமாநிலத் தவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. வடமாநிலத்தவர்கள் பற்றிய தகவல்களை போலீஸ் நிலையங்களில் அவர்களை அழைத்து வரும் ஏஜெண்டுகள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »