கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி முஜிபூர் ரகுமான் (30) இவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் அரசு மருத்துவமனை முன் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2000 பறித்தபோது
ரவுடி முஜிபூர் ரகுமானை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த ரவுடிமீது நகரில் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், கொலை, கொள்ளை என பொதுமக்களிடம் நகரில் பல இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி ரவுடியாக வலம் வந்ததாக தெரியவந்தது.
இந்த ரவுடியை குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவிட்டார். அதன்படி குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு. இதற்கான உத்தரவு ரவுடிக்கு சிறையில் வழங்கப்பட்டது.