கோவையில் அரசு சார்பில் ஒரே நேரத்தில் 1.50 லட்சம் தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆய்வு

கோவை –

கோவை மாவட்டத்தில்  மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. 1,475 இடங்களில் நடைபெறும் இந்த முகாம் மூலம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளை அனைத்துத் தரப்பினரும் பெறும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

 
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் , மருத்துவமனைகள் , அங்கன்வாடி மையங்கள் , சத்துணவு மையங்கள் , தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள் , மலைப் பகுதிகள் , போக்குவரத்து வசதியற்ற பகுதிகள் , கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள் என ஊரகப் பகுதிகளில் 1,166 முகாம்களும் , மாநகராட்சி பகுதிகளில் முகாம்களும் மொத்தம் 1,475 இடங்களில் தடுப்பூசி வழங்கும் முகாம்கள் செயல்பட உள்ளன.


இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும்,முகாம் நடைபெற கூடிய இடங்களை கொரோனா தடுப்பூசி கண்காணிப்பாளர் சங்கர், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆணையளர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து கொரோனா தடுப்பூசி கண்காணிப்பு அலுவலர் சங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது.
சிறப்பு முகாமில் 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1475 முகாம்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு தடுப்பூசி செலுத்துபவர், ஒரு டேட்டா ஆபரேடர் என  2,980 பேர் பணியில் ஈடுபடுவர். 
ஒவ்வொரு மையத்திற்கும் மக்களை அழைத்துவர 2 பேர் வீதம் 2959 அங்கன்வாடி பணியாளர்களும், இந்த பணிகளை கண்காணிக்க 338 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை முகாமிற்கு அழைத்துச்செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட ஆட்சியர் சமீரன்  “ஊரகப்பகுதிகளில் காலை 7 மாலை 7 மணிவரை நடைபெறும். ஏதேனும் ஒரு சிப்ட் அடிப்படையில் ஊழியர்களை முகாமிற்கு அழைத்துச் செல்லலாம். விடுமுறை விட அவசியம் இல்லை.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »