கோவில்களில் சேவை செய்து வரும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவிக்கவேண்டும்-பூசாரிகள் நல சங்கம் கோரிக்கை

கோவை, கலை, இலக்கியம், திரைப்படம், காவல்துறை, தமிழ்மொழி வளர்ச்சி, வீரதீரச் செயல்கள் என பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கும் அறிஞர் பெருமக்களுக்கும் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
இதேபோன்று இந்து சமய அறநிலையத் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் திருக்கோவில்களில் பணியாற்றும் ஊதியம் பெறும் பூசாரிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் ஊதியம் இல்லாமல் சேவை மனப்பான்மையில் பணியாற்றும் பூசாரிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் சேவை விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் எனவும் 
முந்தைய ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பாக சேலத்தை தலைமை இடமாகக் கொண்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் செவிசாய்க்கப்படவில்லை.
எனவே சமயப் பணியாற்றும் சிறந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், திருக்கோவில் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் ஆகியோருக்கு சமய சேவை விருது வழங்கி கௌரவித்தால் அவர்கள் மேலும் சிறப்பாகப் பணியாற்ற உறுதுணையாக இருக்கும் 
நடைபெற்றுக்கொண்டுள்ள நல்லாட்சியில் சுமார் ரூ. 600 கோடிக்கும் மேலான மதிப்புள்ள திருக்கோவில் நிலங்கள்  ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. திருக்கோவில்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் சொத்துகளில் இருந்து வாடகை மற்றும் குத்தகை நிலுவைத் தொகைகள் மும்முரமாக வசூலிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை  மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  அவர்களின் ஆணைக்கிணங்க செம்மையான முறையில்  மேற்கொண்டுவரும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளையும் அலுவலர்களையும் விருது வழங்கி கௌரவிக்க வேண்டியது  அவசியமாகும்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற அனைத்து அம்சங்களையும் படிப்படியாக தாங்கள் நிறைவேற்றி வருகிறீர்கள்.  அத்துடன் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத பல்வேறு நலத்திட்டங்களையும் குறிப்பாக கோவில் பூசாரிகளுக்கு நலன் பயக்கும் வகையில் சட்டப்பேரவையில் அறிவித்து சாதனை படைத்து வருகிறீர்கள் . அதற்காக சேலத்தை தலைமை இடமாகக் கொண்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கம் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.
எனவே அருள்கூர்ந்து திருக்கோவில்களில் தன்னலமற்ற சேவை செய்துவரும் பூசாரிகளையும் அர்ச்சகர்களையும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளையும் கௌரவிக்கும் விதத்தில் சமய சேவை விருது என்ற பெயரிலோ அல்லது அரசு விரும்பும் பெயரிலோ விருதுகள் வழங்கி கௌரவிக்குமாறு தங்களைப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.எனகோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் பி.வாசு பூசாரி தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »