சென்னை டிசம்பர் : கோவிட் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால், பயணம் விரும்பும் மக்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் உள்ளனர். அதே சமயம் வரவிருக்கும் விடுமுறையின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள பயணச் சட்டங்களில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதால் ஓய்வுக்காக மேற்கொள்ளப்படும் வெளியூர் பயணங்களுக்கு பதில் உள்ளூர் மற்றும் அருகிலுள்ள சுற்றுலா இடங்களை தேர்வு செய்கிறார்கள். சமீபத்திய Just Dial, கன்ஸ்யூமர் இன்சைட்ஸ் அறிக்கையின்படி, பட்ஜெட் ஹோட்டல்கள், பிக்னிக் ஸ்பாட்கள், உள்ளூர் சுற்றுலா இடங்கள் மற்றும் பண்ணை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் ஜஸ்ட் டயல் தளத்தில், அனைத்து பயண மற்றும் சுற்றுலா தொடர்பான தேடல்களும் 51% YOY வளர்ச்சியைக் கண்டுள்ளது.
49% வளர்ச்சி விகிதம் இருந்த டயர்-I நகரங்களுடன் ஒப்பிடும்போது, டயர்-II நகரங்களில் இந்த தேவைக்கான வளர்ச்சி 54% அதிகமாக இருந்தது. உள்நாட்டுப் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையின் தேவைப் போக்குகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக, 2020 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் அக்டோபர்-நவம்பர் 2021க்கான நுகர்வோர் போக்குகளை ஜஸ்ட் டயல் மூலம் ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெளிவாகும்.
பிக்னிக் ஸ்பாட்கள், பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் உள்ளூர் சுற்றுலா தலங்களுக்கான தேடல்கள் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் இந்த காலகட்டத்தில் கணிசமாக உயர்ந்துள்ளன. பட்ஜெட் ஹோட்டல்களின் தேவை 220% வளர்ச்சி விகிதத்தைக் கண்டது, அதைத் தொடர்ந்து சுற்றுலா இடங்கள் (147%) மற்றும் உள்ளூர் சுற்றுலா இடங்கள் (121%) வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்த சுற்றுலா போக்கு குறித்து ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி பிரசுன் குமார் பேசுகையில், “பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதால், மக்களிடையே நிதானமாக வெளியூர் செல்வதில் ஆர்வம் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். உள்ளூர் இடங்கள், பிக்னிக் ஸ்பாட்கள் மற்றும் பண்ணை வீடுகள் மற்றும் பட்ஜெட் ஹோட்டல்கள் ஆகியவை நீண்ட தூர சர்வதேச அல்லது உள்நாட்டுப் பயணங்களுக்குப் பதிலாக ஓய்வுநேர நாட்களை செலவிடும் இடங்களாக தெரிகிறது. இது ஒரு வரையறுக்கும் புதிய போக்காக இருக்கலாம், மேலும் இது எதிர்காலத்தில் இந்த வகையை இயக்கும் உள்ளூர் மற்றும் உள்நாட்டு வணிகங்களுக்கு மிகவும் தேவையான வளர்ச்சியை வழங்கவும் தயாராக உள்ளது.’’ என்றார்.
அடுக்கு-I நகரங்களில் பட்ஜெட் ஹோட்டல்களுக்கான தேடல்கள் 207% வளர்ச்சியைக் கண்டன, அதே சமயம் அடுக்கு-II நகரங்களில் இது 198% ஆக இருந்தது. குறிப்பாக, மும்பையில் உள்ள பட்ஜெட் ஹோட்டல்களுக்கான தேவை, அடுக்கு-I நகரங்களுக்கான தேடல்களில் கிட்டத்தட்ட 42% ஆதிக்கம் செலுத்தியது. அதன்படி, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகியவை ஹோட்டல்களுக்கான தேடல்களில் அடுத்தடுத்த மூன்று இடங்களைப் பிடித்தன. இதைத் தொடர்ந்து, சென்னை, ஹைதராபாத், புனே, பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களும் இடம்பெற்றன. “Hotels in Goa” என்பதே அடுக்கு II நகரங்களில் அதிகம் தேடப்பட்ட இடங்களாகும். அதைத்தொடர்ந்து, லக்னோ, கோயம்புத்தூர், சண்டிகர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் தேடல்கள் அதிகமாக இருந்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரனமாக மக்கள் அச்சத்தில் இருப்பதால், அருகில் இருக்கும் உள்ளூர் பகுதிகளை அதிகமாக மக்கள் விரும்புகிறார்கள். தற்பொழுது, அதுவே ஓய்வுநேர பயணத்துக்கான புதிய டிரெண்டினை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக, பிக்னிக் ஸ்பாட்களுக்கான தேடல்கள் இந்தியா முழுவதும் 147% அதிகரித்துள்ளது. அதன்படி, அடுக்கு-I (208%) நகரங்களில் தேடுதல்களில், அடுக்கு-II நகரங்களை விட (167%) கணிசமாக அதிகரித்திருக்கிறது.
அடுக்கு-I நகரங்களில், பிக்னிக் ஸ்பாட்களுக்கான அதிகபட்ச தேடல்களை புனே கண்டது. தொடர்ந்து, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்கள் இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள தேடல்களானது டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னை நகரங்களில் இருந்து வந்துள்ளது. நாக்பூர், நாசிக், சோலாப்பூர், கோவா மற்றும் குவஹாத்தி ஆகியவை பிக்னிக் ஸ்பாட்களுக்கான அதிகபட்ச தேவையைக் கண்ட முதல் 5 இடங்களைப் பெறும் அடுக்கு-II நகரங்களாகும்.
இன்றைய காலக்கட்டத்தில் அதிக தூரம் செல்வதற்கு பதிலாக, வீட்டுக்கு அருகிலுள்ள லோக்கல் பகுதிகளுக்கு சென்றுவருவதையே மக்கள் விரும்புகிறார்கள். எனவே, உள்ளூர் சிறப்புமிக்க இடங்களுக்கான தேடல்களில் இந்தியா முழுவதும் 121% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, இதன் மூலம் வளர்ச்சி தேவையின் அடிப்படையில் அடுக்கு-II ஐ விட அடுக்கு-I நகரங்கள் முன்னேறுகின்றன. அதன்படி, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகியவை அதிகபட்ச தேவை கொண்ட முதல்-3 அடுக்கு-I நகரங்கள் ஆகும். தொடர்ந்து, மும்பை, புனே, சென்னை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றன. மலப்புரம், திருச்சூர், நாசிக், கோயம்புத்தூர் மற்றும் பெல்காம் ஆகியவை அடுக்கு-II நகரங்களில் அதிகபட்ச தேவை கொண்ட முதல்-5 நகரங்கள் ஆகும்.
பார்ட்டி சீசன் நெருங்கி வருவதால், பண்ணை வீடுகளுக்கான தேடல்களும் 56% அதிகரித்துள்ளது. அடுக்கு-I இல் தேவையானது 55% ஆகவும், அதோடு ஒப்பிடும்போது, அடுக்கு-II நகரங்களில் தேவையின் வளர்ச்சி 88% ஆக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடுக்கு-I நகரமான ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களில் 83% தேவையானது உருவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி, புனே, பெங்களூர், சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றன. இதுவே, அடுக்கு-II நகரங்களில், பண்ணை வீடுகளுக்கான தேவையில் நாக்பூர் ஆதிக்கம் செலுத்தியது. தவிர, டெல்லி, புனே, பெங்களூர், சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களின் ஒருங்கிணைந்த தேவையை விட அதிகமாக இருந்தது.
வாடகை கார்களைப் பொறுத்தவரை, அடுக்கு-I நகரங்களில் தேவையின் அடிப்படையில் டெல்லி முதலிடத்திலும், மும்பை மற்றும் ஹைதராபாத் அதிகபட்ச தேடல்களுடன், இந்த மூன்று நகரங்களும் முதல்-3 இடங்களில் உள்ளன. அதோடு, புனே, சென்னை, பெங்களூர், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. அடுக்கு-II நகரங்களில், கோவாவில் கார் வாடகைக்கான தேவை ஏறக்குறைய 103% உயர்ந்துள்ளது. மேலும் இது இந்திய அளவில் டெல்லி மற்றும் மும்பைக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் கோவா உள்ளது. ஆக, கோவா, அகமதாபாத், கோயம்புத்தூர், ஜெய்ப்பூர் மற்றும் சூரத் ஆகியவை கார் வாடகைக்கான அதிகபட்ச தேவை கொண்ட அடுக்கு-II நகரங்களில் டாப்-5 நகரங்களாகும்.