சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கொருக்குப்பேட்டை, தியாகப்பா தெரு மற்றும் கொருக்குப் பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு அருகே கண்காணித்த போது, அங்கு ஒரு பெண் ரகசியமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 1அன்பழகி, பெ/வ.28, க/பெ.பரத்குமார், 10வது தெரு, காந்திநகர், புளியந்தோப்பு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி அன்பழகி மீது ஏற்கனவே 1 கஞ்சாவழக்கு, 1 குட்கா வழக்கு மற்றும் 1 மதுபாட்டில் விற்பனை செய்த வழக்கு உள்ளது தெரிய வந்தது.
இதேபோல, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் காலை, கீழ்பாக்கம், ஹார்ம்ஸ் சாலை, பொன்னியம்மன் கோயில் அருகில் கண்காணித்த போது, அங்கு 2 நபர்கள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பூவரசன், வ/22, த/பெ. வெங்கடேசன், வெள்ளிமேடு பேட்டை, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் மற்றும் மகேஷ், வ/26, த/பெ.ரவணய்யா, காமராஜர்நகர் 9வது தெரு, கொருக்குப் பேட்டை, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மேற்படி 3 நபர்களும், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டனர்.