கொரானா பரவலை கட்டுபடுத்த முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக சாதனைக்காகவும் கண்களை கட்டி சிலம்பம் சுற்றும் மாணவ மாணவிகள்
மதுரை எம்.கே.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தற்காப்பு கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையிலும் கொரானா நோயை ஒழிக்க முக கவசம், சமூக இடைவெளி போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை எம்.கே.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.கே.சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சி மற்றும் சிலம்ப சாதனையாளர்கள் உலக சாதனை புத்தகம் சார்பாக இரண்டு மணிநேரம் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி சிலம்ப பயிற்சியாளரும் ஒருங்கிணைப்பாளருமான ரமேஷ்குமார் தலைமையில் நடுவர் மாரிக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறுவயது பெருவயது வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.