கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
R-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று சாலிகிராமம், 4வது தெரு, விஜயராகபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
அதன் பேரில் மேற்படி வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 1.பிரபாகரன், வ/36, த/பெ. கோவிந்தராஜ், எண்.4, விஜயராகவபுரம், 4வது தெரு, சாலிகிராமம், சென்னை 2.சந்தோஷ், வ/26, த/பெ. கிருஷ்ணன், எண்.41, விஜயராகவபுரம், 4வது தெரு, சாலிகிராமம், சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.150 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மேற்படி 2 நபர்களும், விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டனர்.