குமரியின் சபரிமலை பொட்டல்குளம் ஐய்யன் மலை குபேர ஐய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடக்கம்.
ஆண்டுதோறும் கேரள மாநிலம் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு கார்த்திகை 1ம் தேதி உலகெங்கும் உள்ள ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் மண்டல பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான நேற்று மிகவும் பிரசித்தி பெற்ற குமரியின் சபரிமலை என போற்றப்படும் பொட்டல்குளம் அருள்மிகு ஐய்யன் மலை குபேர ஐய்யப்ப சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். பக்தர்களுக்கு சித்தர் தியாகராஜ சுவாமிகள் சரண கோஷம் முழங்க மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
பின்னர் இரவில் ஐய்யப்பனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது அதனைத் தொடர்ந்து சபரிமலையில் நடப்பது போன்று 18 படிகளுக்கும் பக்தர்கள் சரண கோஷம் முழங்க சிறப்பு படி பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், கோயில் நிர்வாகிகள் ஐயப்பன், முத்தமிழ்ச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.