திண்டிவனம் –
திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு சர்வீஸ் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்திய மழை நீர் செல்லும் கால்வாய் மேற்புறத்தில் இந்த ஆய்வு ஊழியர்கள் புதிய சிமெண்ட் சிலாப்புகள் அமைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கூட்டேரிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சர்வீஸ் சாலை ஓரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் செல்லும் கால்வாய் தூர்ந்த நிலையில் மழைநீர் செல்ல வழியின்றியும், கால்வாய் மேல்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப்புகள் வைக்கப்படும் அப்பகுதி செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் காணப்பட்டது. இதுகுறித்து பொதுமக்களின் புகாரின் பேரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய (நகாய்) ஊழியர்கள் தூர்ந்துபோன கால்வாயை சுத்தப்படுத்தியும், அதன்மேல் புதிய சிமெண்ட் சிலாப்புகளை அமைத்தனர். இச்செயல் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது.