குமரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து குமரியில் நாளை வீடு முன் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்…

கன்னியாகுமரி – மத்திய அரசை கண்டித்து நாளை வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்எல்ஏ அறிவித்துள்ளார்

கடந்த ஆகஸ்ட் மாதம் சோனியா காந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அனைத்து கட்சிகளும் நாடு தழுவிய எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆகையால் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றுவது என தீர்மானித்துள்ளது

பெட்ரோல் டீசலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்ட மத்திய கலால் வரியை திரும்பப் பெற வேண்டுமென்றும், சமையல் கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், வேகம் விருத்தம் 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்றும், வேலைவாய்ப்பு மற்றும் உள்ளூர் தேவையை அதிகரித்து சமூக கட்டமைப்பை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கண்டனத்தை வெளிப்படுத்துவார்கள்

இந்தியாவில் எத்தனையோ பெரிய தலைவர்கள் இருந்தபோதிலும் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கு வேலை திண்டாட்டம் வந்துள்ளது. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 200 நாட்களாக உயர்த்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை எட்டிப் பார்க்க வேண்டும், நகர்புற வேலைவாய்ப்பை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடக்கிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்களின் வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏற்றி பாஜக அரசுக்கு கண்டனத்தை தெரியப்படுத்த வேண்டும். இது போல் பொதுமக்களும் தங்களது எதிர்ப்புகளை தெரியப்படுத்த வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »