கன்னியாகுமரி – மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவில் கம்பளம் ஒழுகினசேரி ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. தண்ணீரில் அதிகளவில் ஓடியதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.