ஆண்டிபட்டி – கடமலை மயிலை ஒன்றியம் சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட 16 கிராமங்கள் உள்ளது. இதில் காந்திபுரம் கீழப் பூசனி யூத்து மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு மின் மோட்டார் மற்றும் குழாய் சேதம் அடைந்த காரணத்தினால் போர்வெல் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி தலைவரை கேட்டுக் கொண்டதற்கிணங்க வைகை ஆற்றிலிருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் சேதமடைந்த பைப்புகளை மாற்றி புதிய இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் சிங்கராஜ புரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் -க்கு கிராம பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை தன் தேவைகளாக கருதி செயல்படும் ஊராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் காந்திபுரம் ரமேஷ் நன்றியை தெரிவித்தார். இவரது செயல் பாராட்டுக்குரியது எனவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.