கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள நேரலகிரி கிராமத்தில் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி, பின்னர் வனப்பகுதிக்கு சென்று விடும். கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒற்றை யானை இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வந்தது. எனவே விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர் .நேற்று நேரலகிரி கிராமத்தை சேர்ந்த நாகராஜப்பா, சந்திரசேகரன், ஆகிய இருவருக்கும் அவர்களின் விளை நிலங்களில் சாகுபடி செய்திருந்த தக்காளி தோட்டத்தில் இரவு நேரத்தில் காவல் காக்கும் பணியில் இருந்து வந்தனர். நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் நேரலகிரி கிராமத்தை சேர்ந்த ‘நாகராஜப்பா, சந்திரசேகரன், 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் நேரலகிரி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கிராம மக்கள் கிராமத்தில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டி விடுமாறு வனத்துறையினர்க்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்