மதுரை – மதுரை காமராஜர் சாலையில் தனியார் பள்ளிக்கூடத்தில் சிலம்பாட்டம் போட்டி நிகழ்ச்சியில் தெலுங்கான கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிலம்பாட்டம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நான் மதுரைக்கு எப்போது வந்தாலும் மீனாட்சி அம்மனை தரிசிக்காமல் சென்றதில்லை. ஆனால் இந்த முறை அதற்கு வாய்ப்பில்லாமல் போனது தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோயிலை திறப்பதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
மேலும் நமது கலாச்சாரத்துடன் கலந்தது சிலம்பாட்டம் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிலம்பம் சுற்றுவதை கண்டு அதனைப் பற்றி தெரிந்து கொண்டேன். டாக்டராக நான் வரவேற்கும் விளையாட்டில் சிலம்பும் ஒன்று இந்த விளையாட்டு மன நலம் காத்து ஒற்றுமையை ஏற்படுகிறது. ஒரு காலத்தில் சிலம்பம் சுற்றித்தான் காட்டு விலங்குகளை துரத்தினார்கள். குறிப்பாகப் பெண்கள் குழந்தைகள் தற்காப்புக்கு சிலம்பம் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தீனதயாள் சேவை மையம் உறவுகளை விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதி சுவாமிநாதன் ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் சிலம்பாட்ட கழக மாவட்டத் தலைவர் பெரின் மகேந்திர வேல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தேவகி ஸ்கேன் நிறுவனர் டாக்டர் நாகேந்திரன் பாஜக மாநில தலைவர் சீனிவாசன் மாநில துணைத் தலைவர் மகாலட்சுமி மாநகர் மாவட்ட தலைவர் கே கே சீனிவாசன் புறநகர் மாவட்டச் செயலாளர் மகா சுசீந்திரன் துணைத்தலைவர் ஹரிஹரன் முன்னாள் மாவட்ட தலைவர் சசி ராமன் மற்றும் ஜெயபிரபா நகைக்கடை உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.