காஞ்சீபுரம்- திவ்ய தேசங்களில் பிரசித்திபெற்ற நான்கு திவ்ய தேசங்களும் ஒன்றாக இருக்கும் சிறப்பு வாய்ந்த காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் 11 மாதங்களுக்கு பிறகு திறந்து எண்ணப்பட்டது.
இதில் கோவில் செயல் அலுவலர்கள் மா.வெள்ளைச்சாமி, வி.மலைவாசன், பரம்பரை அறங்காவலர் ஆர்.அழகியசிங்கர் கோவில் ஆய்வாளர் பிரித்திகா, மேலாளர் ரகு ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் 5 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் ரூ.9 லட்சத்து 5 ஆயிரத்து 727, தங்கம் 36 கிராம், வெள்ளி 78 கிராம் கிடைத்துள்ளது.