கயத்தார் நொச்சிகுளம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..

தூத்துக்குடி- தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியத்துக்குட்பட்ட நொச்சி குளத்தில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் திமுகவின் முக்கிய பிரமுகர்களும்  பிரபல தொழிலதிபர்களாக திகழ்ந்து வருபவர்களான இளவேலங்கால் பஞ்சாயத்து திமுக‌ ‌தலைவர்  சாவித்ரி வைரவன்பட்டி முருகேசபாண்டியன்.. திருநெல்வேலி மெட்ரோ அரிமா சங்கத் தலைவரும் கயத்தார் திமுக பிரமுகருமான பேட்டை மாரியப்பன்.‌ ஆகியோர்கள் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.கயத்தார் ஒன்றியத்துக்கு உட்பட்ட நொச்சி குளம் கிராமத்தில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலுக்கு  கயத்தார் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள்  வருகை தந்து சாமி தரிசனம் செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரம் உடனே கிடைத்து வருவதால் இந்த கோவிலுக்கு எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக வந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட கவுன்சிலரும் பிரபல தொழிலதிபருமான சந்திரசேகர்.ஊர் நாட்டாமை கருப்பசாமி. தர்மகர்த்தா முத்துராஜ். ஈஸ்வரன். பால முருகன். மணிகண்டன். காளியப்பன். முத்துராஜ்.. அரிச்சந்திரன். கனேஷ்குமார். காளிராஜ். கார்த்திக்.  உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »