உத்தமபாளையம் – தேனி மாவட்டத்தில் கம்பம் நகரில் தினமும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலாக நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழுவம் அமைந்துள்ளது. தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு இக்கோயிலின் பெருமை உள்ளது. என்னவென்றால் அழிந்துவரும் நாட்டுமாட்டினம்தான் இதன் சிறப்பு 400-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் ஒன்றாக தொழுவில் அடைக்கப்படுகின்றன. மாட்டுத்தொழுவையே பக்தர்கள் தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர். தமிழர் திருநாளாம் மாட்டுப் பொங்கல் அன்று இக்கோவிலில் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுகிறது.
தற்போது இக்கோவிலில் நிர்வாகக் குளறுபடியால் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இக்கோயிலின் முன்பு சில சமூகவிரோதிகள் அமர்ந்து சரக்கடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதால் பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர்.
எனவே நிர்வாக குளறுபடிகளை சரி செய்து மீண்டும் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டுமென பக்தர்களும் கம்பம் பகுதி மக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.