ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், உத்தமபாளையம், கம்பம் பிரதான சாலையில் முஹம்மது தமீம் அன்சாரி துணிக் கடை நடத்திவருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்தக் கடையின் அருகே இருந்த உரக்கடை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடையில் இதுபோன்று பூட்டு உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது .உடனே கடை உரிமையாளர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின்பேரில் வடக்கு காவல் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் கம்பம் தெற்கு காவல் இன்ஸ்பெக்டர் லாவண்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும் உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா அவர்கள் சம்பவத்தை அறிந்த உடன் விரைந்து கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும் திருட்டு நடந்த கடைகளில் சிசிடி கேமரா எதுவும் இல்லாததால் அருகில் உள்ள கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் இக் கொள்ளைச் சம்பவங்களில் ஏதேனும் துப்பு கிடைக்கின்றதா என்ற விசாரணையை தொடங்கி உள்ளார்கள் போலீசார். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதால் கம்பம் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.