உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நடைபெற்ற கொரோனா நோய்த் தொற்றில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் காசோலையும், தாய் அல்லது தந்தையை இழந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் காசோலையும் மற்றும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் கே வி முரளிதரன் தலைமையிலும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டார்கள்.