கன்னியாகுமாி – திருவட்டாா் ஆதிகேசவ பெருமாள் கோவில் கிழக்கு தென்கோடி மூலையில் அமைந்திருக்கும் நரசிம்ம மடம் (நடுவில் மடம்)-க்கு சொந்தமானது, இந்து சமய அறநிலையத்துறை, வடிவீஸ்வரம் உதவி ஆணையா் கண்காணிப்பில் உள்ளது
மடத்தின் சொத்திலிருந்து பலதரப்பட்ட விலை உயா்ந்த மரங்களை மடத்தின் சொத்தை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள சுகுமாரன் நாயா் அவா்களின் மகன் ஜோதி என்பவா் வெட்டி விற்றுள்ளாா்.
அறநிலைத்துறை மரங்களை வெட்டி விற்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கோயிலையும், கோயில் சொத்தையும் பாதுகாக்க வேண்டிவாின் மகன் கோயில் மரங்களை திருட்டு தனமாக வெட்டி விற்றுள்ளாா்.
இது பக்தா்களுக்கு மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அறநிலையத்துறை இவா் மீது தக்க நடவடிக்கை எடுத்து மேற்படி மடத்து சொத்தை பாதுகாக்க உாிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திருவட்டார் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.