கன்னியாகுமரி – சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர். டிசம்பர். ஜனவரி. ஆகிய மூன்று மாதங்கள் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகரித்திருக்கும் ஆகையால் மூன்று மாதங்களும் ஐயப்ப பக்தர்கள் சீசன் என்று கருதப்படும் இங்கு சுற்றுலா வரும் வாகனங்களுக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பஸ், கார், வேன் உள்ளிட்டவைகளுக்கு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதம் முதல் தமிழக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வாகனங்கள் அடியோடு நின்று போனது. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வர்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுற்றுலா வாகனங்கள் பஸ் 100. வேன் 70. கார் 50. வசூலிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி பேரூராட்சியின் மூலம் கன்னியாகுமரி வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது