கன்னியாகுமரி – நாகர்கோவில் அருகே முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உடலுறவு செய்து கர்ப்பமான பின்பு திருமணம் செய்து குழந்தையும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் சரிவர கவனிக்காமல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது சம்பந்தமாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 11 முறை புகார் கொடுத்தும் 63 முறை காவல் நிலையத்திற்கு சென்று காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த பாதிக்கப்பட்ட பெண் மகாதேவி தன் குழந்தையுடன் நீதி கேட்டு குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். தீக்குளிக்க முயன்ற போது அப்பெண்ணை வடசேரி தனிப்பிரிவு போலீஸ் செல்லீஸ் பெட்ரோல் கேனை பறித்து காப்பாற்றினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன் குழந்தையுடன் தீ குளிக்க முயன்ற பெண்னை தடுத்து நிறுத்தி காப்பாற்றிய வடசேரி தனிப்பிரிவு காவலர் செல்லீஸ்ஸை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பத்ரிநாரயணன் சண்மானம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.