கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் பணம் மற்றும் சொத்துக்களை ஆட்டைய போட்ட பாலியல் குற்றவாளிகள்….

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இளம்பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் அந்த இளம்பெண்ணின் 30 சவரன் நகைகள் மற்றும் பல லட்சங்கள் பணம் ஆகியவற்றை பாலியல் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் ஆட்டைய போட்ட சம்பவத்தின் செல்போன் பேச்சு ஆடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக பாலியல் வழக்கில் விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது உறவினர்களின் செல்போன்களை விசாரணை என்ற பெயரில் பறிமுதல் செய்த போலீசார் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணையே விபசாரியாக சித்தரிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து  நடத்தி  வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சுமார் முப்பத்தி ஐந்து பேருக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மிரட்டி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு எதிராக வாக்குமூலங்கள் பெற்றுள்ளதாகவும் பலரிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்து அதை அபகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சாதாரணமாக வழக்கு தொடர்பாக செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற சட்ட விதிமுறைகளை கூட மீறி செல்போன்களை ஆட்டைய போடும் குமரி போலீசாரின் செயல் தமிழக காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கடன் கொடுத்தவர்களிடம்  கடன் திரும்ப எப்போது பெறப்பட்டது, மாதா மாதம் எவ்வளவு பணம் தருவாள் என்பது அடங்கிய வங்கி ஸ்டேட்மெண்ட் பெறும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

பாலியல் வழக்கில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதை விட்டுவிட்டு பாலியல் வழக்கின் குற்றவாளிகளை காப்பாற்ற பாலியல் புகார் கொடுத்த இளம்பெண்ணை விபசாரியாக சித்தரிக்கும் அவலம் தொடர்கிறது. பாலியல் வழக்கில் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவரின் மனைவியிடம் போலீசார் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு எதிராக புகார் மனு வாங்கி இளம்பெண்ணை கொலை வழக்கில் சிக்க வைக்கவும் பணம் கறந்ததாகவும் சித்தரித்து இளம்பெண்ணை குற்றவாளியாக்க போலீசாரே முயற்சிகள் செய்து வருவதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலியல் குற்றவாளியிடம் தன்னிடம் இருந்து அபகரித்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் ஜீவனாம்சம் வழக்கில் கிடைத்த நான்கரை லட்ச ரூபாய் பணம் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்து கிடைத்த  லட்சக்கணக்கான பணம் ஆகியவற்றை திரும்ப கேட்டு பேசும் ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியது மல்லாமல் அந்தப் பெண்ணிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை ஆட்டையைப் போட்ட விவகாரம் தற்போது வெளியாகி உள்ளதன் மூலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை விபசாரியாக்கி தற்கொலை செய்து கொண்டவனிடம் இருந்து இளம்பெண் பணத்தை கறந்ததாக தயார் செய்யப்பட்ட போலி வாக்கு மூலங்கள் செயலிழக்க  தொடங்கியுள்ளது. தற்போது வெளியாகி உள்ள செல்போன் ஆடியோக்கள் மூலம் போலீசாரின் தகிடுதத்த பாலியல் புகார் கொடுத்த இளம் பெண்ணையே குற்றவாளியாக சித்தரிக்கும் விசாரணைக்கு பெரும் பின்னடைவை தற்போது வெளியாகியுள்ள விபரம் செல்போன் பேச்சு ஆடியோ மூலம் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தற்பொழுது போலீசார் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை குற்றவாளியாக்க புதிய வழியைத் தேட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணோ பாலியல் வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் தன்னையே குற்றவாளியாக்கி வழக்கை குழிதோண்டிப் புதைக்க நினைக்கும் போலீசார் மீதும் பாலியல் குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தை தற்போது அணுகி உள்ளதாகவும் விரைவில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படவும் பாலியல் குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை விபசாரி ஆக்கும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வழக்கு தாக்கல் செய்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் அதிரடி நடவடிக்கைகள் விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இளம் பெண் தரப்பில் கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் உபி போலீசாரை மிஞ்சும் வகையில் வினோத விசாரணை நடத்திய குமரி போலீசாரின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும் நாள் விரைவில் அரங்கேறும் என்று சமூக ஆர்வலர்கள் கூறும் கருத்து உண்மையானதா என்பதை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிடும் உத்தரவின்படி விரைவில் எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »