கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவை நகர் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை கோவளம் ஊராட்சி தலைவர் ஸ்டேன்லி சேவியர் தலைமை தாங்கினார்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
வடக்கு குண்டலம் பகுதியில் நியாய விலை கடை கொண்டு வர வேண்டும். இதனால் தேறிவிலைகுண்டல் பகுதி மக்கள் பயனடைவார்கள். 1வது வார்டு பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்கு சிறுவர் சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
1 வாடு பகுதியில் பழைய பூங்கா தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் என்னவென்றால் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாடு பகுதியில்சிறுவர் பூங்கா இருந்துள்ளது இதனை அப்பகுதியை சேர்ந்த நிலத்தின் உரிமையாளர் அதனை அகற்றி சிறுவர்கள் பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள் அத்தனையும் மாற்றியுள்ளனர். ஆகவே உடனடியாக அத்தனை சிறுவர் பொருட்களும் இருந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தார் சாலை அமைத்தல்
ராமசாமி நாடார் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும்
1 வார்டு பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே இரண்டு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்.
வடக்கு குண்டல் பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி நீர்த்தேக்கத் தொட்டியை அமைத்து தரவேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை தீர்மானமாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
குப்பை வண்டி வேண்டும்
தேறி விலை குண்டல் பகுதியில் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் கழிவு பொருட்கள் கொட்டுவதற்கு இடமில்லாமல் தெருவில் கொட்டுகின்றனர். இதேபோல் ராமசாமி நாடார் சாலையில் உள்ள வீட்டுப் மக்களும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாமல் தெருக்களில் கொட்டுகின்றனர். ஆகவே உடனடியாக குப்பை வண்டி வேண்டுமென்றும் அந்த குப்பைகளை தினந்தோறும் எடுப்பதற்கு ஊராட்சி மன்றத்தில் இருந்து நபர்களை அமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
கோவளம் ஊராட்சிக்கு உட்பட்டபகுதியில் கிராம சபை கூட்டம் சிலுவை நகர் பகுதியில் நடைபெற்றது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் ஸ்டேனி டேனியல். உறுப்பினர் ராஜா செல்வி. 2. வார்டு உறுப்பினர் செல்வி மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.