வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கட்டிடம் கட்ட தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தேவைக்கு கண்டிப்பாக கட்டியாக வேண்டும் என்ற சூழ்நிலையில் வெளியில் கடன் வாங்கி கடன் பட்டு கட்டிடம் கட்டி வருகின்றனர். கட்டுமானப் பொருட்களான மணல், ஜல்லி, சிமென்ட், கம்பி, செங்கல், எம்சாண்ட், கருங்கல் விலையும் மூன்று மடங்கு வரையும், வண்டி வாடகை இருமடங்குகளாகவும், கொத்தனார், சித்தாள் கூலி, பெயிண்டர், எலக்ட்ரீசியன் கூலி உயர்ந்துள்ளதால் வானம் தோண்டி கட்டிடம் கட்டும் முடிக்கும் வரை மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் சதுரம் ஒன்றுக்கு 70 ஆயிரத்துக்கு இருந்த செலவுகள் 2021 நடப்பு படி சதுரம் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதால் ஆரம்பித்த வேலையை இடையில் நிறுத்த முடியாமல் வெளியே நபரிடம் கடன் வாங்கி வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் கடன் உதவி பெற அரசு மற்றும் தனியார் வங்கியை நாடி புரோக்கர் கமிஷன் வங்கி கடன் வங்கியின் வட்டி கட்ட முடியாமல் மொத்த சொத்தையும் எழுதி வைத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலையும் உள்ளது. இது தொடர்பாக தன்னார்வலர்கள் கூறுகையில் கட்டிடம் கட்டுவோர் அவர்களது பட்ஜெட்டில் அடங்குமா என யோசித்து கட்டிடம் கட்ட செயல்பட்டால் இருக்கின்ற சொத்துக்களை விற்க நேரிடாது எனக் கூறுகின்றனர். எனவே அரசு கட்டுமானப் பொருட்கள் இரும்பு மற்றும் சிமெண்ட் மற்ற உற்பத்திப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை வரியுடன் அதிகபட்ச அதிகமாக வருவதால் கட்டுமான பொருட்களுக்கு வரி விதிவிலக்கு செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கின்றனர்.