வருஷநாடு ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் தனியார் நிறுவனம் சிலிண்டர் விநியோகம் செய்து வருகின்றது. கடமலைக்குண்டு மையப்படுத்தி ஒன்றியத்தில் பல பகுதிகள் மற்றும் அனைத்து கிராமங்களுக்கும் சமையல் சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்கு டெலிவரி பாய் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 50 வரை அதிகமாக பெறப்படுவதாக இப்பகுதி பெண்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தற்போது அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரித்துக் கொண்டே போவதால் வருமானத்தை கணக்கிட்டு பார்க்கும் பொழுது மிக சிரமமாக இருப்பதாகவும் மேலும் இவர்களை ரூபாய் 50 கேட்கும்பொழுது மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர். இது விஷயமாக சமூக ஆர்வலர்கள் சிலர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது நேரடியாக குடோனில் வந்து நேரடியாக பெற்றுக் கொண்டால் மட்டும் அதிகமாக ரூபாய் இருபது கொடுத்துவிட்டு சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தங்கள் பகுதிக்கு நேரடியாக கொண்டு வரும்பொழுது வாகன வாடகை ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் சம்பளம் வினியோகம் செய்யப்படும் சிலிண்டரில் இருந்து வாங்குகின்ற 50 ரூபாயில் தான் கொடுக்க முடியும் எனவும் கூறி வருவதாக கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயித்துள்ள விலையை மட்டும் பெற மேற்கண்ட தனியார் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இல்லத்தரசிகளும் கேட்டுக் கொள்கின்றனர்.