ஆண்டிப்பட்டி – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பாலு ஊத்து ஊராட்சியில் சமுதாயக் கூடத்தில் குழந்தைகள் குழுக்களின் பிரதிநிதி மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்ட மேலாளர் ஜெசுகரன் தங்கராஜ், பகுதி பொறுப்பாளர் யோவான், குழந்தைகளின் உரிமைகள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றியும் இளவயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். கடமலைக்குண்டு தீயணைப்பு துறையினர் மாணிக்கம் தலைமையில், 6 தீயணைப்பு வீரர்கள் போலி பேரிடர் ஒத்திகை செய்முறை பயிற்சி செய்து காட்டினார்கள். அதன்பின் கலந்து கொண்ட மாணவர்களும் செய்முறை பயிற்சி செய்தனர். மேலும் பேரிடர் மற்றும் மீட்பு பணிகள் பற்றியும் தெளிவாக அறிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தன்னார்வ பணியாளர்கள் அன்பரசன், ஜெகதீஸ் ரஞ்சனி, மாலதி, நாகலட்சுமி, வினோதா, கணேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். நன்றியுடன் முகாம் நிறைவு பெற்றது