வருஷநாடு – தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுற்று வட்டார கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் பி டி ஆர் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு அந்த அந்த ஊராட்சிக்கு அருகில் உள்ள கண்மாய்களில் நீர் தேக்கி அப்பகுதி விவசாயத்திற்கு பாசன வசதிக்கு உதவி வருகிறது. இதில் பயன்படும் கிராமமான வேப்பம்பட்டி, காமாட்சிபுரம் சீலையம்பட்டி, ஜங்கள் பட்டி பூமலைகுண்டு, தர்மபுரி பூசாரி கவுண்டன்பட்டி கொடுவிலார்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட விவசாயிகள் பெரும்பாலும் திராட்சை வாழை வெங்காயம் கோவைக்காய் பாகற்காய் போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பிடிஆர் கால்வாயில் இருந்து தண்ணீர் வருவதில்லை இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் மேலும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை விலை கொடுத்து அவர்களது சொந்த நிலத்தில் தண்ணீர் நீர்த்தேக்க தொட்டி கட்டி வாரத்திற்கு எத்தனை நாள் என்ற அடிப்படையில் நீர் தேக்கி விவசாயம் செய்கின்ற அவலநிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் பி டிஆர் கால்வாய் மூலம் ஓடைப்பட்டி பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகளின் நலன் கருதி நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளை கருத்திற்கொண்டு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.