ஒலக்கூர் அருகே டயர் வெடித்ததால் லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது

திண்டிவனம் – திண்டிவனம் அருகே டயர் பஞ்சர் ஆனதால் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரியில் ஏற்றிச்சென்ற ஜன்னல் கண்ணாடி பறந்து சென்று சாலையில் நடந்து சென்றவர் மீது விழுந்ததில் முதியவர் படுகாயமடைந்தார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் இன்று காலை தனது வீட்டிலிருந்து ஒலக்கூர், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சென்னை திருமுல்லைவாயல் சிப்காட் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட பணிக்காக கண்ணாடி ஜன்னல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஆனது வந்து கொண்டிருந்தது. லாரியை சென்னை கோடம்பாக்கம் எம். ஆர். கே. நகர் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவரது மகன் வின்சென்ட் (37) ஓட்டி வந்தார். லாரி இன்று காலை 7.30 மணி அளவில் ஒலக்கூர் கூட்டு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியின் இடது பக்க முன் டயர் திடீரென்று வெடித்ததில் நிலைதடுமாறிய லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது லாரியில் ஏற்றிச் சென்ற கண்ணாடி ஜன்னல்கள் சாலையில் சிதறின அதில் ஒரு கண்ணாடி பறந்து சென்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முத்துகிருஷ்ணன் என் காலில் விழுந்தது. இதில் அவரது காலில் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒலக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து தகவல் அறிந்த எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர் மேலும் மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு சாலையில் சிதறிக் கிடந்த கண்ணாடி ஜன்னல்களை ஏற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »