வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் கடமலைக்குண்டு வருசநாடு குமணன் தொழு ஆகிய ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு துணை சுகாதார நிலையத்தில் 100% இலக்கை நிர்ணயித்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது இம்மருத்துவ முகாமில் மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் கிராம செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் பல்வேறு காரணங்களால் வெளியூர் சென்றிருந்த பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசி போடப்பட்டது பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசம் அணிந்து ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இதனால் நூறு சதவிகித இலக்கை அடையும் என சுகாதாரத் துறை ஆய்வாளர் முருகானந்தம் கூறுகிறார்.