ஒட்டன்சத்திரம் – தமிழ்நாடு முழுவதும் 40,000 முகாம்கள் அமைத்து ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா தடுப்பூசி முகாமினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியும், கழக துணைப்பொதுச் செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி ஒப்புதலோடும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி வழிகாட்டுதலின்படியும் 100 சதவீத இலக்கை நோக்கி ஒட்டன்சத்திரம் ஒன்றியம், கொ.கீரனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சண்முகசுந்தரம் தலைமையிலும், ஊராட்சி மன்ற துணை தலைவர் க.தங்கராஜ் முன்னிலையிலும் மாபெரும் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முருகன்அய்யம்மாள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் த.காயத்ரிதேவி தர்மராஜன் , ஊராட்சி செயலர் தங்கவேல் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.தனபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார வளர்ச்சி) சுரேஷ் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம வளர்ச்சி) கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன், கொ.கீரனூர் மருத்துவர் ந.திகனபிரியா, மருத்துவ ஆய்வாளர் அப்துல்நாதர்அலி, ஆசிரியர் இன்பசாரதி, ஆசிரியை செல்வராணி, அங்கன்வாடி பணியாளர்கள் முருகேஸ்வரி, நாகலட்சுமி, அங்கன்வாடி உதவியாளர் வீரலட்சுமி, மகளிரணி துளசிமணி, தூய்மைப் பணியாளர் சித்ரா, மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த சிறப்பு முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.