ஒட்டன்சத்திரம் ஒன்றியம் அத்திக்கோம்பை ஊராட்சி அருகே நேற்று பெய்த கனமழையால் பைபாஸ் சாலை பாலத்தின் வழியாக ஓடைக்கு செல்லும் மழை வெள்ளம் தடுப்பணை கட்டாத காரணத்தினால் உயர்தர நாற்றுப் பண்ணைக்குள் புகுந்து சுமார் 15 லட்சம் மதிப்பிலான நாற்றுகள் சேதமாகி விட்டன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், அத்திக்கோம்பை ஊராட்சி அருகே பரமேஸ்வரி என்பவர் சுமார் 60 சென்ட் அளவில் உயர்தர நாற்று பண்ணையை இரண்டு வருடமாக பராமரித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் பைபாஸ் பாலத்தின் வழியாக ஓடைக்கு செல்லும் மழை வெள்ளம் தடுப்பணை கட்டாத காரணத்தினால் நாற்றுப் பண்ணைக்குள் புகுந்துவிட்டது. இதனால் 15 லட்சம் மதிப்பிலான நாற்றுகள் சேதம் அடைந்து விட்டன.
இந்நிலையில் பரமேஸ்வரி கூறியதாவது: ஏழை எளிய மக்களின் தோழனாகவும் ஒட்டன்சத்திரம் தொகுதி வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களின் நிலையை எடுத்துக்கூறி உரிய இழப்பீடு வழங்குவதற்கு ஆவணம் செய்யும்படி கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.